ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் காத்தான்குடி மாநகர சபை, புதிய பிரதேச சபை உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல் 

0
245

IMG_20171023_095835(ஹம்ஸா கலீல்)

காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேசசபையை உருவாக்குவது தொடர்பான அறிக்கை அவரசமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய இருப்பதனால், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுகவீனமுற்ற நிலையிலும் மேற்படி கலந்துரையாடலை அவரது கொழும்பு இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி, முன்னாள் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீட், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சார்பில் சகோதரர் பஹ்மி, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் தலைமை கிராம சேவக உத்தியோகத்தர் ஜறூப் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று முழு நாளும் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. IMG_20171023_095759 IMG_20171023_095835

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here