கல்குடா-ஈகார்ட்ஸ் நிறுவன அனுசரணையில் முஅத்தின்களுக்கான அதான் பயிற்சி

0
201

DSC00359முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஅத்தின்களுக்கான அதான் கூறும் பயிற்சியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தியுள்ளது. திணைக்களப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் அவர்களின் ஆலோசனைக்கமைய உதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் அன்வர் அலி அவர்களின் வழிகாட்டலில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தவிசாளர் ஜுனைட் நளீமி மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏறாவூர், கல்குடா மற்றும் காத்தான்குடி பிரதேசங்களின் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்களின் பாங்கு சொல்லும் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு, இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.

துருக்கி நாட்டைச்சேர்ந்த முஹம்மத் பிலால் வளவாளராகக்கலந்து கொண்டதுடன், இதற்கான அனுசரணையை ஈகார்ட்ஸ் நிறுவனம் ஏனைய பள்ளிவாசல்களின் உதவியுடன் வழங்கியிருந்தது. நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் இப்பயிற்சி நெறியினை முன்கொண்டு செல்லவிருப்பதாக திணைக்களப்பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.DSC00294 DSC00314 DSC00327 DSC00359 IMG_20171022_115730

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here