அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, கட்டாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்களுடன் சந்திப்பு

Spread the love

WhatsApp Image 2017-10-23 at 3.10.59 AMகத்தார் சிறி லங்கா தஃவா சென்றரின் அழைப்பின் பேரில் கட்டார் வந்துள்ள நாடறிந்த இஸ்லாமிய பிரசாரகரும் கல்குடா ஜம்இய்யாது தஃவத்தில் இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவருமான மெளலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி MA அவர்களுக்கும் கட்டாரிலுள்ள கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று 23.10.2017ம் திகதி திங்கட்கிழமை பர்வா சிட்டியில் இடம்பெற்றது.

குறிப்பிட்ட ஒரு சில சகோதரர்கள் கலந்து கொண்ட குறித்த சந்திப்பில், கட்டாரிலுள்ள எமது சகோதரர்களிடையே இஸ்லாமிய பிரசாரப்பணியை முன்னெடுப்பது தொடர்பிலும், சகோதரர்களை ஒன்றிணைப்பது தொடர்பிலும் மிகவும் ஆக்கபூர்வமான கருத்துக்களை மெளலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி பகிர்ந்து கொண்டார்.

மற்றும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட சகோதரர்களால் பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் சகோதரர்களை இணைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை  மேற்கொள்ள இணைப்பாளராக மெளலவி அஷ்ஷெய்க் பெளசர் சிறாஜி நியமிக்கப்பட்டார்.

கத்தார் சிறி லங்கா தஃவா சென்றரின் அழைப்பின் பேரில் கட்டார் வந்த மெளலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி MA அவர்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஆக்கபூர்வமான உரைகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. WhatsApp Image 2017-10-23 at 3.10.58 AM WhatsApp Image 2017-10-23 at 3.10.59 AM

சனயாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது…WhatsApp Image 2017-10-22 at 3.01.59 AM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*