சட்டவிரோத சூறா சபைக்கெதிராக நடவடிக்கை- கல்குடா மஜ்லிஷ் சூறா சபை

0
286

IMG_20171024_085228பாறுக் றியாஸ்

நேற்று 23.10.2017ம் திகதி திங்கட்கிழமையன்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கல்குடா மஜ்லிஷ் சூறா சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சூறா சபையின் தலைவர் சட்டத்தரணி ஐ.ரீ.சஹாப்தீன் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.

பிரதேச செயலாளரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்ற இக்கூட்டத்தில் அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சூறா சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டம் பிரதேச செயலாளரின் உரையுடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தலைவரினால் தலைமையுரையும், செயலாளர் எம்.ஐ. ஹாமித் மௌலவி அவர்களினால் கடந்த கூட்டத்தின் கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் கருத்துகளும் பிரதேச செயலாளரினால் கேட்டறியப்பட்டன.

இதன் போது சட்டவிரோதமாக தங்களுடைய அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடத்துடிக்கின்ற பழைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் பற்றி பல உறுப்பினர்கள் காரசாரமான விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.

தமது பதவிக்காலம் முழுதும் கோமாவிலிருந்து தமது அரசியலுக்கு மட்டும் சூறா சபையினை பழைய நிர்வாகம் பயன்படுத்திய விதமும் பதவிக்காலம் முடிந்த பின்பும் முறைகேடாக அதில் நிலைத்திருந்ததும் பிரதேச செயலாளருக்கு உறுப்பினர்களால் விளக்கப்பட்டன.

தாங்கள் புதிய நிர்வாக சபையினை பொதுக்கூட்டத்தின் மூலம் தெரிவு செய்து அதனை பிரதேச செயலகத்திலும், சமூக சேவைத்திணைக்களத்திலும் பதிவு செய்த பின்னர் இந்த சூறா சபையின் செயற்பாடுகளுக்கும், அதன் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக பதவி மோகம் கொண்டவர்களால் பதவியிலிருந்து துரத்தப்பட்ட பின்னர் கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்திருக்கின்றமை அவர்களின் கையாலாகாத தனத்தினையும் வங்குரோத்து மனப்பான்மையினையும் வெளிப்படுத்துவதாக உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரியப்படுத்தினர்.

பின்னர் இந்நாசகாரச் செயல்களை செய்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானமெடுக்கப்பட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, இறுதியாக செயலாளரினால் நன்றியுரையுடன் கூட்டமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.IMG_20171024_085228 IMG_20171024_085302 IMG_20171024_085331

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here