அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஒக்டோபர் மாதக்கூட்டம்

0
177

IMG_20171024_093333(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஒக்டோபர் மாதக்கூட்டம் எதிர்வரும் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை இறக்காமம் மௌலானா மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக பேரவையின் செயலாளர்  சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஸஹாப்தீன் தெரிவித்தார்.

பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசனம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாதாந்த கூட்டத்தில்  பொதுச்செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் எம்.ஐ.எம். அஷ்ஹர் உள்ளிட்ட நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது, அங்கத்தவர்களின் எதிர்காலத் தொழிற்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

எனவே, இக்கூட்டத்திற்கு சகல அங்கத்துவ ஊடகவியலாளர்களும் தவறாது சமூகமளிக்குமாறு பேரவையின் செயலாளர் எம்.ஸஹாப்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here