மாஞ்சோலையில் போதையொழிப்பு, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம்

0
299

20171024_101052எம்.எஸ்.எம்.இப்ராஹீம் ஆசிரியர்
கோறளைப்பற்று மேற்கு-ஓட்டமாவடி, மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் பிரிவில் போதையொழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக்கான விஷேட கூட்டம் நேற்று 24.10.2017ம் திகதி இடம்பெற்றது.

கிராம சேவகரின் தலையிமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கிராம மட்டத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை என்பனவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை இடைவிலகல் ஆகியவற்றினை ஒழித்து, சிறுவர்களைப்பாதுகாத்து அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தல் எனும் அரசாங்கத்தின் திட்டத்திற்காமைவாக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சமயத்தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதான இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரி, பிரதேச சுகாதாரப்பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், வாழைச்சேனை நீதிமன்ற சமூக நல மேம்பாட்டு உத்தியோகத்தர், பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.20171024_100122(1) WhatsApp Image 2017-10-24 at 10.47.57 PM 20171024_101052

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here