உள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

0
267

S1720377எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு-கல்குடாத்தொகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நேற்று 24.10.2017ம் திகதி செவ்வாய்கிழமை வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி  நடைபெற்றது.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேசக்கிளை என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு, கோறளைப்பற்று செயலகப்பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி கோறளைப்பற்று பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும்.

கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராமங்களை உள்ளடக்கி கோறளைப்பற்று தெற்கு பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே, கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையினுள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள வடமுனை, கல்லிச்சை, ஊத்துச்சேனை, வாகனேரி, புணாணை ஆகிய கிராமங்கள் புதிதாக அமைக்கப்படும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச சபையுடன் சேர்க்கப்பட வேண்டும்.

அதே போன்று, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராமங்களை மாத்திரம் உள்ளடக்கி புதிதாக பிரதேச சபை அமைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. ஆனால், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த எமது கிராமங்களில் எல்லையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படக்கூடாதென்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப்பேரணி வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் கையளிக்கப்பட்டது.

பொது மக்களால் வழங்கப்பட்ட மகஜர் உரிய முறையில் அரசாங்க அதிபரிடம் ஒப்படைப்பதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கோறளைப்பற்று பிரதேசக்கிளை ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணியினை குழப்பும் வகையில், ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.S1720377 S1720378 S1720380 S1720382 S1720386 S1720387 S1720390 S1720395 S1720397 S1720398 S1720399 S1720402 S1720403 S1720407 S1720409 S1720413 S1720418 S1720419 S1720421 S1720425 S1720432 S1720435

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here