ஆங்கிலப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
214

IMG-20171025-WA0051எம்.ரீ. ஹைதர் அலி

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாத கால ஆங்கிலப்பயிற்சி நெறி அமெரிக்க ஒன்றியத்தின் அனுசரணையில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின்  ஏற்பாட்டில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் கலந்து கொண்டு பாடநெறியைப் பூர்த்தி செய்து, சிறப்பாக பரீட்சையில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24.10.2017ஆந்திகதி – செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் தவிசாளர் திரு.குமார் நடேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடக, கலாசார பணிப்பாளர் ஜின் றூசோ அவர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிக் கெளரவித்தார்.

நாடளாவிய ரீதியில் கெளரவிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஐந்து ஊடகவியலாளர் கெளரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஒரேயொரு முஸ்லிம் நபர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் ஊடகப்பிரிவினைச் சேர்ந்த காத்தான்குடி முஹம்மது ஸஜீத் என்பதும் குறிப்பிடத்தக்கது.IMG-20171025-WA0051

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here