அபிவிருத்திக்குழுவின் முயற்சியில் மீராவோடை வைத்தியசாலைக்கு மூன்று மாடிக்கட்டடம்

0
386

IMG-20171025-WA0067எம்.ரீ. ஹைதர் அலி

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முயற்சியினால் மூன்று மாடிக் கட்டடத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா அவர்களின் தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதாரப் பிரதியமைச்சர் கௌரவ பைஸல் காசிம் அவர்களை இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக 2017.07.23ஆந்திகதி – ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரிலுள்ள அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

அத்துடன் இச்சந்திப்பில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் உமர் அலி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை விரிவாக பிரதியமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன், அதனைக் கேட்டறிந்த பிரதியமைச்சர் அன்றைய தினமே இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்தியசாலையினை பார்வையிட்டதுடன், தனது முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டடமொன்றினை அமைப்பதற்காக தனது அமைச்சினூடாக 2018ஆம் ஆண்டுக்குரிய நிதியொதுக்கீட்டிலிருந்து நிதியினைப் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

அத்துடன், இவ்வைத்தியசாலையினை தற்போதைய சூழ்நிலை கருதி தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்குரிய ஆவணங்களை மாகாணத்தினூடாக மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அதற்குரிய நடவடிக்கைகளையும் தான் முன்னின்று மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்விஜயத்தின் போது பிரதியமைச்சரின் இணைப்பாளர் கபீர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

அதற்கமைவாக இவ்வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயற்படுத்துவதற்குப் பொறுப்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ பைஸல் காசிம் அவர்கள் அன்றைய தினம் நிந்தவூரில் நடைபெற்ற சந்திப்பின் போது நியமித்திருந்தார்.

அதற்கமைவாக சுகாதாரப் பிரதியமைச்சரின் பணிப்புரைக்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கட்டடத்திணைக்களத்தின் பொறியியலாளர் கிளக்சன் ஆகியோர் 2017.10.25ஆந்திகதி – புதன்கிழமை (நேற்று) வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் ஆகியோரிடம் கலந்தாலோசித்து அமையப்பெறவுள்ள மூன்று மாடிக் கட்டடத்திற்கான இடத்தினையும், அதற்குரிய அளவீடுகளையும் மேற்கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கௌரவ கே.பீ.எஸ். ஹமீட் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா அவர்களின் தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலைக்குத் தேவையான ஆளணி மற்றும் வளங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பெரிதும் அயராது பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை பாராட்டத்தக்கதாகும்.IMG-20171025-WA0070 IMG-20171025-WA0071 IMG-20171025-WA0072 IMG-20171025-WA0073IMG-20171025-WA0065 IMG-20171025-WA0067 IMG-20171025-WA0068 IMG-20171025-WA0069

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here