கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைத்தீர்வுக்கு ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்

0
58

unnamed (1) (2)முன்சிப் அஹ்மத்

வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தீர்மானித்துள்ளார்.

இன்றைய தினம்  ஜனாதிபதியை நேரில் சந்தித்து மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாண கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கவுள்ளதாக முன்னாள் மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கான கால எல்லை விரைவில் நிறைவடையவுள்ளதால், எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்குள் அனைத்து ஆசிரியர்களுக்குமான தீர்வை தாம் பெற்றுத்தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, இவர் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்தியில் சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here