கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க முன்னாள் அமைச்சர் சுபையிர் முயற்சி

0
228

22810233_824985974339375_207099210_o(எஸ்.அஷ்ரப்கான்)
தேசிய கல்வியற்கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணமான  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியற்கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து, வெளி மாகாணப்பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் சுபையிர் கடந்த 24.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே மேற்கனண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணப் பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்துள்ளமை கவலையான விடயமாகும். இது தொடர்பில் குறித்த ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கமைவாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக தேசிய கல்வியற்கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து, வெளி மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருடன் கொழும்பு சென்ற முன்னாள் அமைச்சர் சுபையிர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலியினையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில்  ஜனாதிபதியையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தெரிவித்தார்.Untitled-1 copy 22810233_824985974339375_207099210_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here