சமூக சேவையாளர் எம்.ஏ.எம்.ஸப்ரினுக்கு ரத்னதீப தேச அபிமான்ய விருது வழங்கிக்கௌரவிப்பு

0
257

47b42589-55b0-41e3-a19c-4b803a3f370bஅஸீம் கிலாப்தீன் 

சமூக சேவையாளர் எம்.ஏ.எம். ஸப்ரின் ரத்னதீப தேச அபிமான்ய சமூக சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மலையக கலை கலாசார அமைப்பு மற்றும் என்.பி.சி வானொலி வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும் விழாவில் ஸப்ரினுக்கு இந்த விஷேட விருது வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 23 வருட அரச சேவை அனுபவங்களைக்கொண்ட இவர், தற்போது கைத்தொழில் வர்த்தக அமைச்சில் பதில் நிர்வாக உத்தியோகத்தராகப் பணி புரிகின்றார். இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களம், வெளிநாட்டமைச்சு, பிரான்சிலுள்ள இலங்கைத்தூதராலயம், மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை ஆகியவற்றில் பணி புரிந்து நிறைந்த அனுபவங்களைப் பெற்றவர்.

அகில இலங்கை சமாதான நீதவானான இவர், நீதியமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட மும்மொழி மொழி பெயர்ப்பாளருமாவார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் அபுசாலி மற்றும் சுல்பிஹா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.1cc24287-aa6d-4f73-8f47-e658a622fad0 6f3356a2-9959-4eb1-98db-b188e0a6929a 9caebdc8-776c-429c-af54-108052ac5906 47b42589-55b0-41e3-a19c-4b803a3f370b b37e9d36-e506-46de-ab5c-f218c820b908

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here