புலமைப்பரிசில் பரீட்சையில் பாத்திமா சாபியா பாடசாலையில் முதலிடம் பெற்று சாதனை

0
96

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அப்துல் ஹமீட் பாத்திமா சாபியாகல்முனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்.) மாணவி செல்வி அப்துல் ஹமீட் பாத்திமா சாபியா இவ்வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலையில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்..

இவரின் திறமையை அதிபர் யூ.எல்.எம். நஸார் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் பாராட்டியதோடு, கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இம்மாணவி, அப்துல் ஹமீட்(சபீக்) மற்றும் அபூபக்கர் றிஸ்வானா தம்பதிகளின் இளைய புதல்வியாவார்.

இப் பாடசாலையில் இந்த மாணவியோடு சேர்த்து 12 மாணவர்கள் புலமைப்பரிசில் சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here