பொத்துவிலில் தொடரும் கல்விக்கான போராட்டம்

0
200

IMG_1501-சல்மான் லாபீர்

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற பெருமளவான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக்கோரியும் மெத்தனப்போக்கில் கண்மூடித்தனமாக இருக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் பொத்துவிலில் தொடர்ச்சியான எதிர்ப்புப்போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களாக பாடசாலைகளுக்கு எந்தப்பிள்ளைகளையும் அனுப்பாது பெற்றோர்கள் தங்கள் எதிர்ப்பலைகளைப் பதிவு செய்கிறார்கள்.

இதையொட்டி கடந்த 25.10.2017ம் திகதி புதன்கிழமை மாபெரும் கண்டனப்பேரணியும் நடாத்தப்பட்டது. தொடர்ந்தும் நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் பெற்றோர்கள் சூளுரைத்துள்ளனர்.

இப்போதைய பொத்துவில் கல்வி கள நிலவரம் படுமோசமாக இருக்கின்றது. பொத்துவிலில் மொத்தம் 21 பாடசாலைகள் இருக்கின்றன. 2016 கல்வி நிருவாக சுற்று நிரூபத்தின்படி பொத்துவிலுக்கு 460 ஆசிரியர்கள் தேவை. ஆனால், இருப்பதோ வெறும் 285 ஆசிரியர்கள். சுமார் 175 ஆசிரியர் பற்றாக்குறையோடு பொத்துவில் கோட்டம் தத்தளிக்கிறது. 175 ஆசிரியர்களின்றி பொத்துவில் கோட்டம் இயங்குவதென்பது மிகுந்த வேதனையானது. அதுமட்டுமல்லாமல், ஏலவே பெருமளவு ஆசிரியர்கள் பற்றாக்குறையோடு இருக்கையில் ஒரே இரவிலிருக்கும் ஆசிரியர்களில் 39 பேரை இடமாற்றி அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொத்திவில் கல்வி நிலையைச் சீர்படுத்தி மாணவர்கள் தடையின்றி கற்பதற்கு உதவ வேண்டுமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.IMG_1491 IMG_1494 IMG_1498 IMG_1500 IMG_1501 IMG_1502 IMG_1525 IMG_1527 IMG_1528 IMG_1529 IMG_1530 IMG_1531 IMG_1532 IMG_1533 IMG_1534 IMG_1535 IMG_1536 IMG_1537 IMG_1538 IMG_1539 IMG_1540 IMG_1541 IMG_1542 IMG_1543

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here