தியாவட்டவான் அரபா வித்தியாலயத்தில் பசுமைப்பூங்கா வேலைத்திட்டம்

0
206

IMG_7116எஸ்.எம்.எம்.முர்ஷித்

சமுர்த்தி திணைக்களத்தினால் பசுமைப்பூங்கா வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சமுர்த்தி திணைக்களங்களில் முதலாவது நிகழ்வாக கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வாழைச்சேனை தியாவட்டவான் அரபா வித்தியாலயத்தில் பசுமைப்பூங்கா வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கியின் தலைமை முகாமையாளர் எம்.ஏ.அஸிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜீத், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பாடசாலை அதிபர் ஏ.எல்.இஸ்மாயில், பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட அதிதிகளால் மரங்கள் நடப்பட்டது.IMG_7107 IMG_7113 IMG_7116 IMG_7120 IMG_7123 IMG_7127

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here