செங்கலடி மத்திய கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கல்

0
249

20171026_111619எஸ்.எம்.எம்.முர்ஷித்

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் முன்னாள் பிரதித்தவிசாளர் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் செங்கலடி மத்திய கல்லூரிக்கு விருந்தினர் கதிரைகள் மற்றும் மேசைகள் வழங்கும் நிகழ்வு நேற்று 26.10.2017ம் திகதி வியாழக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ரூபா 125000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட விருந்தினர் கதிரைகள் மற்றும் மேசைகள் என்பனவும், கிழக்கு மாகாண முன்னாள் பிரதித்தவிசாளரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ரூபா 50000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள் போன்றனவும் பாடசாலை அதிபர், ஆசிரியர் மாணவர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.20171026_111339 20171026_111533 20171026_111553 20171026_111619 20171026_111753 20171026_113057 20171026_113148

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here