எல்லை மீள்நிர்ணயம் மீள்வாசிப்பு – ஜுனைட் நளீமி

0
90

578810_266781936768474_1518244367_nஎல்லாம் மூடிய அறைக்குள் எழுதி முடிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நடந்தப்படுகின்றது. மட்டக்களப்பில் உள்ளூராட்சி எல்லைகள் குறித்து விளக்கமில்லாமல் அறிக்கை விடும் பலர், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்திற்காக பனம்பலனா ஆணைக்குழுவினால் சிபாரி செய்யப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற 240 சதுர கிலோ மீற்றர் பரப்பு நிலங்களுக்குப் பதிலாக 90 சதுர கிலோ மீற்றர் சதுரப்பரப்பினை ஏற்றுக்கொள்ள முனைப்புக்காட்டுவதும், கோறளைப்பற்று மேற்கு செயலகத்திலிருந்து ஆயுத முனையில் பிரித்தெடுக்கப்பட்ட ஐந்து 05 கிராம சேவக பிரிவுகளில் வாகனேரியை மட்டும் பெற்றுக்கொண்டு மற்றயதை தாரை வார்ப்பதும், தன்னாமுனை வரையான முந்தய ஏறாவூர் பட்டின எல்லையை தமிழ் சகோதர இனம் பாதிக்காத வகையில் ஏறாவூர் நகர சபை பிரதேச சபை என மீள்நிர்ணயம் செய்வதில் மௌனித்திருப்பதும், காத்தான்குடி பிரதேச மாநகர சபை அல்லது நகர சபையுடன் கூடிய பிரதேச சபை என எல்லை மீள்நிர்ணயம் செய்வதில் மக்கள் மயப்படுத்துவதில் தவறிவிட்டதான நிகழ்வுகளும் சரி செய்யப்படுவதற்கு இன்னும் சில நூற்ராண்டுகள் கையேந்து நிலைக்கு எமது சமூகம் தள்ளப்படுவதற்கு வாய்ப்பாக அமையப்போகின்றன.

தொகுதிவாரித்தேர்தல் முறைமை நடைமுறைக்கும் வரும் போது தற்போதைய மட்டக்களப்புத்தொகுதி முறை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை கேள்விப்படுத்தும்.

எனவே, தற்போதைய தொகுதிகளில் கல்குடா இரட்டைத்தொகுதியாகவும், மட்டக்களப்புக்கு பல்லங்கத்துவ (முல்ட்டி) தொகுதியாகவும் மாற்றம் பெற வேண்டும். இதில் தற்போது மாவட்டத்தில் குறைந்தது ஒருவரையாவது பிரதிநிதியாகத தெரிவு செய்ய வேண்டி முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட ஒரு தொகுதி முறைமை குறித்து மறைமுக அரசியல் கயிறிழுப்புக்கள் இடம்பெறுகின்றது.

தொகுதி மீள்நிர்ணயத்தில் காத்தான்குடியுடன் ஏறாவூரை இணைத்து என்றும், கல்குடாவுடன் முன்பிருந்து போன்று ஏறாவூரை இணைத்து என்ற கயிறிழுப்பு காணப்படுகின்றது. இந்நிலையில், வெறுமனே வாக்குகளை எண்ணிக்கொண்டு வளங்களையும் எதிர்கால அடிப்படை தேவைகள் குறித்தும் தூரநோக்குடன் இது குறித்து கருத்தாடல் செய்யாத நிலை தலைமைத்துவ வறுமை நிலையாகும்.

ஏறாவூர் சில தமிழ் பிரதேசங்களை உள்வாங்கி தனியான தொகுதியாக கொள்ளப்பட முடியுமென்ற கருத்தும் நிலவுகின்றது. இவ்விடயத்தில் மாவட்ட மூன்று முக்கிய பிரதேச முஸ்லீம் சமூகப்பிரதிநிதிகள் தங்களது அரசியல் தலைமைகளை ஒரே மேசைக்கு கொண்டு வந்து கலந்தாடத்தவறிய வங்குரோத்து நிலை. மற்றயது சகோதர தமிழ் இனத்துடன் சிவில் சமூகம் பேசுவதற்கான பொறிமுறை கண்டறியப்படாமை. புதிய உள்ளூராட்சி சபைகளின் உருவாக்கம் வட்டார ரீதியிலான முறையான பிரிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமானால், கூடுதலான நிதிகள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் நியாயமாக பகிரப்பட வாய்ப்பாக அமையும்.

உதாரணமாக மாவட்டத்தில் தற்போது பதினைந்து உள்ளூராட்சி சபைகள் காணப்படுமாயின், பதிந்து சபைகளுக்குமான நிதிகளே மாவட்டத்திற்கு மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணிக்கை கூடும் போது ஒதுக்கீடும் கூடுதலாகும்.

அவ்வாறே புதிய தொகுதிகளின் உருவாக்கம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். அத்தோடு, இனத்துவ சந்தேகங்களை நீக்கி ஒவ்வொரு சமூகமும் திருப்தி உணர்வுடன் வாழ வழி செய்யும். எனவே, இத்தகைய விடயங்கள் அவசரமாக கருத்தாடல் செய்வதற்கு பொருத்தமான இறுதி நேரமாக அமையுமென நினைக்கின்றேன்.

இல்லாவிட்டால்  சிவில் அமைப்புக்கள் கூடினோம். பிரச்சினை தெளிவில்லாமல் உள்ளது. விடயப்பரப்புள்ளவர்கள் உள்வாங்கப்படவில்லையென்ற முடிவுரையுடன் எமது தீர்வுப்பொறிமுறை குறுந்திரைப்படமாக முடிவுறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here