நாவற்குழியுடன் நிறுத்தப்பட்டிருந்த யாழ் ரயில் சேவை மீள் ஆரம்பம்

0
163

பாறுக் ஷிஹான்-
நாவற்குழி ரயில் புதிய பாலத்தின் புனரமைப்புக் காரணமாக கடந்த 23 ஆம் திகதி நாவற்குழி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை நேற்று (26) மாலை தொடக்கம் யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த யாழ்தேவி ரயில் 4.20 மணியளவில் நாவற்குழியை அடைந்து, புதிய பாலத்தினூடாக தனது பயணத்தைத் தொடர்ந்தது.

முன்னர் இங்கிருந்த பாலத்திற்கருகில் வைத்து புதிய பாலம் பொருத்தப்பட்ட நிலையில் பாரம் தூக்கி மூலம் பழைய பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அங்கு பொருத்தப்பட்டது.

இந்தியாவின் IRCON புகையிரத அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நீண்டகால உத்தரவாதத்துடன் இப்புதிய பாலம் புனரமைக்கப்பட்டுள்ளது.train (1) train (2) train (3) train (10) train (12)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here