வாழைச்சேனையில் பதற்ற நிலை

0
227

ஆதம் றிஸ்வின்
ஆட்டோ தரிப்பிடத்திற்காக ஒதுக்கிய இடத்தில் பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்படுவதால் தற்போது வாழைச்சேனையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு கட்டிடத்திற்கு முன்பாக முஸ்லிம் ஆட்டோச் சாரதிகளுக்கென வாழைச்சேனை பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று 27.10.2017ம் திகதி நண்பகல் பஸ் தரிப்பிடம் ஒன்றுக்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு அங்கு இனமுறுகலொன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
வாழைச்சேனை பெட்ரோ செட் பகுதியினை அண்டிய பகுதிகளில் முஸ்லிம் ஆட்டோச் சாரதிகள் தங்களது ஆட்டோக்களை நிறுத்துவதற்கு பல மாதங்களாக இன ரீதியான பாகுபாட்டில் மறுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த இடத்தில் 05 ஆட்டோக்கள் மாத்திரமே நிறுத்துவதற்கு வாழைச்சேனைப் பிரதேச சபையினால் எழுத்துமூல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த பஸ் தரிப்பிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அந்த 5 ஆட்டோக்களையாவது அவ்விடத்தில் நிறுத்தி வைத்து அன்றாட வருமானத்தைப் பெறுவதிலிருந்தும் முஸ்லிம் ஆட்டோச் சாரதிகள் சந்தர்ப்பத்தை இழக்கும் துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கருவாக்கேணி எல்லை வீதியைத் தாண்டியே தமிழ் ஆட்டோ சாரதிகள் தங்களது ஆட்டோக்களை நிறுத்த வேண்டும் என வாழைச்சேனைப் பிரதேச சபையினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும் அதனைத் தாண்டி முஸ்லிம் ஆட்டோ சாரதிகளின் தரிப்பிடத்தில் வேண்டுமென்ற இனமுறுகலொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காய நினைப்பவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஆட்டோக்களை நிறுத்தி வருவதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
அத்தோடு குறித்த இடத்தில் பஸ் தரிப்பிடத்தை அமைக்க இனவாத அதிகாரிகள் பின்புலமாகச் செயற்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
 
இது தொடர்பான விரிவான செய்திகள் பின்னர் பதிவேற்றப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here