ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் முயற்சிக்கு சாதகமான தீர்வு-அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை பாராட்டத்தக்கது

Spread the love

Untitled-1 - Copyஊடகப்பிரிவு

கத்தாரில் தொழில் புரியும் இலங்கை பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இலங்கையில் காணப்படும் கல்வித்திட்டம்  கத்தாரிலுள்ள இலங்கை பாடசாலையில் போதிக்கப்படாமை, கத்தாரிலுள்ள இந்திய பாடசாலைகளின் கல்வித்திட்டம் இலங்கை மாணவர்களுக்கு பொருத்தமின்மை, இந்திய கல்வி நிறுவனங்கள் அடுத்த கல்வி ஆண்டில் இலங்கை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதை நிறுத்தியுள்ளமை, கத்தாரிலுள்ள இந்திய, இலங்கை கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடர்ந்த மாணவர்கள் மீண்டும் தமது தாய் நாட்டில் கல்வியைத் தொடர முடியாத நிலை போன்ற பல்வேறு பாரிய பிரச்சினைகளை கத்தாரிலுள்ள இலங்கை பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனும் கோரிக்கை இருந்து வந்த போதிலும், இதற்கான சரியான தீர்வை யாரும் வழங்காத நிலையில், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கல்வி முன்னேற்றம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு நடவடிக்கை தொடர்பில் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கத்தார் வந்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்களுடன் இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றின் போது, இது தொடர்பிலான கோரிக்கையொன்றையும்  முன்வைத்திருந்தது.

இது தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக்கொண்டு, குறித்த சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக வாக்குறுதியளித்த நிலையில்,  மறுதினம் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர நடவடிக்கை முயற்சி தொடர்பில் அவரது ஊடகப்பிரிவினால் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கத்தாரில் இயங்கும் இலங்கை பாடசாலை பிரித்தாணியாவின் பாடத்திட்டத்தையும், இந்திய பாடசாலைகள் இந்திய பாடத்திட்டங்களையும் கொண்டியங்குவதால் இலங்கை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் நாடு திரும்பி இலங்கை பாடத்திட்ட அடிப்படையில் கல்வியைத் தொடர்வோ, இலங்கை அரசினால் வழங்கப்படும் இலவச கல்வியைப் பெற்றுக்கொள்ளவோ முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆகையால், இலங்கை பாடத்திட்டத்தை தழுவிய பாடசாலையின் தேவையை உணர்ந்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் இது தொடர்பிலான கோரிக்கையை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோர்களின் சார்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று பிள்ளைகளின் கல்வி தொடர்பில் அக்கறை கொண்டு துரித முயற்சியெடுத்த கெளரவ அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன அவர்களுக்கும் இச்சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்து தந்துதவிய முஸ்லிம் காங்கிரஸின் கத்தாருக்கான இணைப்பாளர் மெளலவி அஷ்ஷெய்க் முஹம்மது புகாரி அவர்களுக்கும், குறித்த நிகழ்வை தலையேற்று நடாத்திய மெளலவி அஷ்ஷெய்க் எம்.நெளபர் அவர்களுக்கும், ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை சார்பாகவும் இங்குள்ள பெற்றோர்கள், மாணவர்கள் சார்பாகவும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.cc fff Untitled-1

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*