ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய நிருவாகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்-அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்

0
309

வ்வ்வ்ஊடகப்பிரிவு

எமது தாய்ப்பள்ளி வாயலான ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர்களுக்கான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யபப்பட்ட புதிய நிருவாகத்தினருக்கு அல்லாஹ்வுடைய அருளும், அன்பும் கிடைக்கப் பிரார்த்திப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இந்தப்பள்ளிவாயலை சிறப்புற நடாத்தக்கூடிய அனைத்து தகுதிகளும் இந்த புதிய நிருவாக சபையினருக்குண்டு. மக்களுடைய நேரடித்தெரிவின் மூலம் இது நடைபெற்றிருப்பதனால் முழுக்க முழுக்க மக்களுக்கு பொறுப்புச்சொல்லக் கூடிய சபையாகவும், சுயாதீனமாக முடிவுகளை எடுக்கக்கூடிய சபையாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வுடைய அமானித்தை நிறைவேற்றக்கூடிய சபையாகவும் மிளிர வேண்டும்.

எந்தவிதமான பக்கச்சார்பில்லாத நடுநிலையான சபையாக கடமையாற்றி சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சபையாகவும் பலம்வாய்ந்த சம்மேளமொன்றை உருவாகத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு  இப்பிரதேசதிற்கும் தேசத்திற்கும் முன்மாதிரிமிக்க சபையாகவும் மிளிர இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here