அம்பாறை மாவட்ட விளையாட்டுத்தொகுதியின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த பிரதியமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

0
260

IMG_0983(அகமட் எஸ். முகைடீன்)
விளையாட்டுத்துறை அமைச்சின் 290 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அம்பாறையில் அமைக்கப்படும் அம்பாறை மாவட்ட விளையாட்டுத்தொகுதியின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஒப்பந்த நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில்  திறந்து வைக்கப்படவுள்ள குறித்த மாவட்ட விளையாட்டுத் தொகுதியின் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக்குழு இன்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம் செய்த போது, மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்ரம, விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க, அம்பாறை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்பப்பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

அம்பாறை மாவட்ட விளையாட்டுத்தொகுதியில் அமையப்பெறும் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம் மற்றும் பிரதான பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டு அவ்வேலைத்திட்டங்கள் எவ்வாறு பூரணப்படுத்தப்பட வேண்டுமென்பது தொடர்பில் அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவினால் இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இதன் போது உகன திஸ்ஸபுர வித்தியாலய 14 வயதிற்குட்பட்ட மற்றும் 15 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட பெண்கள் அணியினருக்கு கரப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இப்பாடசாலையின் 14 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட பெண்கள் அணியினர் பாடசாலைகளுக்கிடையிலான டி.எஸ்.ஐ. சுப்பர் ஸ்போர்ட்ஸ் சம்பியானாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.1 3 IMG_0877 IMG_0881 IMG_0893 IMG_0894 IMG_0896 IMG_0898 IMG_0903 IMG_0904 IMG_0907 IMG_0922 IMG_0930 IMG_0931 IMG_0941 IMG_0942 IMG_0946 IMG_0955 IMG_0959 IMG_0972 IMG_0974 IMG_0979 IMG_0980 IMG_0983 IMG_0986

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here