ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்

0
251

fddநேற்றிரவு (28.10.2017ம் திகதி சனிக்கிழமை) நடைபெற்ற ஓட்டமாவடி முஹைதீன்  ஜும்ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையைத்தேர்வு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நம்பிக்கையாளர் சபைக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை கல்குடா நேசன் தெரிவித்துக்கொள்கிறது.

பலரது எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் இன்று நடைபெற்ற தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்ததன் மூலம் இப்பிரதேசமும் சமூகமும் பாரியதொரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இறுதி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இப்பிரதேசத்தின் பிரதான மார்க்க மையமாகத் திகழும் இப்பள்ளிவாயல் நெடுங்காலமாக ஒரு சிலரின் பிடிக்குள் ஆற்பட்டு சரியான மார்க்க நடைமுறைகள் பேணப்படாத நிலையில், இப்பிரதேச மக்களிடத்தில் அதிருப்தி மன நிலையைத் தோற்றுவித்திருந்தமையும் அதன் வெளிப்பாட்டையும் இன்றைய தேர்தல் முடிவுகள் சுட்டி நிற்கின்றன.

ஆகவே, கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு இப்பிரதேசத்தினதும் சமூகத்தினதும் மார்க்க, கல்வி மற்றும் ஏனைய சமய, சமூகம் சார் நடவடிக்கைகளிலும் தன்னாலான பணியை புதிய நிருவாகம் ஆற்ற வேண்டும்.

அத்துடன், சமூக, இன நல்லுறவைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பிரதேசத்தின் சிறந்த கட்டமைப்புள்ள அமைப்பை நிறுவுதற்கும் அதனைத் தலைமையேற்று நடாத்துவதற்கும் புதிய நிருவாகம் முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here