வொலிவோரியன் மைதான சுற்று மதில் நிர்மாணிப்புக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் 50 இலட்சம் நிதியொதுக்கீடு

0
185

IMG_1120(அகமட் எஸ். முகைடீன்)
சாய்ந்தமருது வொலிவோரியன் விளையாட்டு மைதானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்காக 50 இலட்சம் ரூபா நிதியினை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸ் குறித்த மைதானத்திற்கான தனது கள விஜயத்தின் போது ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக்குழு சாய்ந்தமருது வொலிவோரியன் விளையாட்டு மைதானத்திற்கு நேற்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம் செய்த போது, மேற்படி நிதியொதுக்கீட்டிற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது பார்வையாளர் அரங்கின் கீழ்ப்பகுதியில் ஜிம் நிலையம் மற்றும் கழிவறை என்பவற்றை நிர்மாணிப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 15 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்தோடு, அடுத்து வரும் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இம்மைதானம் தேசிய ரீதியிலான தரம் வாய்ந்த மைதானமாக அமைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.IMG_1123 IMG_1126 IMG_1127 IMG_1128 IMG_1134 IMG_1140

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here