ஓட்டமாவடி பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத்தேர்தலில் ஹனீபா விதானையின் அணி வெற்றி (வீடியோ)

0
305

22829444_1524314797658849_5021320975631477594_oஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்
தேசியத்திலே முக்கிய பேசும் பொருளாகப் பார்க்கப்பட்டு வந்த ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய நம்பிக்கையாளர் சபைக்கான தேர்தல் சுமார் பத்து வருடங்களுக்கு பிற்பாடு நேற்று 28.10.2017ம் திகதி சனிக்கிழமை குறித்த பள்ளிவாயலில் இடம்பெற்றது.

அதில் ஹனீபா (மம்மலி) விதானையின் தலைமையில் போட்டியிட்ட குழுவானது 17 ஆசனங்களில் 12 ஆசனங்களைக் கைப்பற்றியதினால் மம்மலி விதானையின் குழுவிடம் ஓட்டமாவடி பள்ளிவாயலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபைக்கான நிருவாகம் கையளிக்கப்பட்டது.

அமைதியாகவும் முற்றிலும் ஜனநாயகத்தினை தழுவிய வகையில் நடந்த வாக்களிப்பில் 1200 க்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டமையானது, குறித்த பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகத்தெரிவிற்கு ஜமாஅத்தார்கள் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதனை தேசியத்திற்கு எடுத்துக்காட்டும் விடயமாக இருக்கின்றது.

ஹனீபா விதானையின் குழுவில் போட்டியிட்ட மேலதிக பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், அல்-ஹாஜ் ஏ.எல்.ஹபீப் மொஹம்மட் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.எம்.நசீர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஜமீல், வைத்தியர் எம்.எம்.முஸ்தபா, முன்னாள் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், ஆசிரியர் எம்.ஐ.இல்யாஸ். எம்.எம். ஹனீபா (மம்மலி விதானை), மெளலவி எம்.எஸ்.எம்.அஸ்ரஃப் (தபாலதிபர்), மெளலவி யூ.ஏ.மஜீத் ஆகியோர்கள் வெற்றியீட்டியுள்ளமை மம்மலி விதானைக்கு ஓட்டமாவடி பிரதேச மக்கள் எந்தளவு கெளரவத்தினைக் கொடுத்து நம்பிக்கையுடன் பள்ளிவாயல் நிருவாகத்தினையும் கையளித்துள்ளனர் என்ற செய்தியினை பறைசாற்றும் விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, ஏனைய குழுவில் போட்டியிட்ட ஏ.எல்.எம்.ஹனீபா ஹாஜியார், ஏ.எம்.எம்.உவைஸ், வைத்தியர் எம்.பி.எம். பிர்னாஸ், வைத்தியர்.எஸ்.ரி.எம்.நஜீப் கான், ஐ.ரி.அஸ்மி ஆகியோர் வெற்றியீட்டியுள்ளனர். மேலும், மிக நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் பள்ளிவாயல் நிருவாகத்தெரிவில் அமோக வெற்றீட்டிய மம்மலி விதானையினை ஜமாஅத்தார்கள் கட்டியணைத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனை அவதானிக்கக்கூடியதாக இருந்த அதே நேரத்தில், கூடிய விருப்பு வாக்குகுகளுடன் முன்னாள் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் மற்றும் மம்மலி விதானையின் வெற்றியானது, கல்குடாவில் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தினை அல்லது ஒரு மறுமலர்ச்சியுடனான மாற்றத்தினை நோக்கிய பயணமாகவும் இருக்கலாமென்பதும் ஊகிக்கக்கூடிய விடயமாகவே மறுபக்கத்தில் நோக்கப்படுகின்றது.

அந்த வகையிலே, வரலாற்றில் கல்குடா அரசியலினைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், கல்குடாவின் பாராளுமன்றம் என்றழைக்கப்படும் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கான நம்பிக்கையாளர் சபைத்தேர்தலில் ஹனீபா (மம்மலி) விதானைக்கும் அவருடைய குழுவிற்கும் மக்கள் வழங்கியுள்ள குறித்த வெற்றியானது, எதிர்காலத்தில் மம்மலி விதானை ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் தவிசாளர் பதவியினை கைப்பற்றுவார் என்பது அரசியல் ரீதியான எதிர்வு கூறலாகப்பார்க்கப்படும் அதே நேரத்தில், என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கின்றது.

மேலும், வரலாற்றில் எழுதப்பட்டுள்ள ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கான நம்பிக்கையாளர் சபைத்தேர்தலில் இடம்பெற்ற நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ:

22901742_1524345987655730_418988314_n

Capture22829444_1524314797658849_5021320975631477594_o0102

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here