கிண்ணத்தை வென்றது கதுருவெல பெரடைஸ் அணி

0
294

ஆரிப் எஸ்.நளீம்
தமன்கடுவை பிரதேச செயலகப்பிரிவில் கதுருவெல மாணிக்கப்பிட்டி புதிய மைதானத்தில் நடைபெற்ற T 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தெரிவான கிங் ஸ்டார் மற்றும் பெரடைஸ் அணிகள் நேற்று (29.10.2017)  மோதிக்கொண்டன.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கல்லேல கிங் ஸ்டார் அணித்தலைவர் தாம் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக விருப்பம் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங் ஸ்டார் அணி 18 ஓவர்கள் நிறைவில் 6 விக்கற்றுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய முஸ்லிம் கொலனி பெரடைஸ் அணி 18.2  ஓவர்கள் நிறைவில் 4 விக்கற்றுக்களை மாத்திரம் இழந்து மிக எளிதாக வெற்றி இலக்கை தனதாக்கிக்கொண்டது.

மேற்படி போட்டியில் 16 அணிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக சன் சைன் அணி வீரர் முர்ஸித் தெரிவானார்.
-தகவல் சபீர்.23140337_1492258417527444_1294985145_n 22901694_1492258334194119_795026113_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here