மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதனூடாக நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் குறையுமென்பது முட்டாள் தனமான கருத்து-கெஹெலியவுக்கு கிழக்கின் முன்னாள் முதல்வர் பதில்

0
219

Captureமாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதனூடாக பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறையுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது முட்டாள்த்தனமான கருத்து என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மாகாணங்களிடம் கையளிப்பது எவ்விதம் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை குறைப்பதாக அமையுமென கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பினார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை குறைப்பதால் பாராளுமன்றத்துக்கு 150 குண்டுகளையேனும் வைக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறிய கருத்துக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் இதனைக்கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த கிழக்கின் முன்னாள் முதல்வர்,

மாகாணங்களுக்கேயுரித்தான பல அதிகாரங்களை மாகாணங்களின் விருப்புக்களுக்கப்பால் பலாத்கராமாக மத்திய அரசு இன்று கையாண்டு வருகின்றது. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கக்கூடாதென்று சொல்வதற்கு மாகாண சபைகள் ஒன்றும் சட்ட விரோதமான நிறுவனமல்லயென்பதை முட்டாள்த்தனமாக கருத்துத்தெரிவிக்கும் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தை விட ஜனநாயக ரீதியிலும் மக்களாட்சிக் கோட்பாட்டு ரீதியிலும் 100 வீத மக்களின் வாக்குகளாலேயே தெரிவாகின்றனர். ஏனெனில், பாராளுமன்றத்தின் 29  உறுப்பினர்கள் மக்களால் அல்லாமல் தேசியப்பட்டியல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

ஆகவே, மாகாண சபைகளை எந்தவிதத்திலும் பாராளுமன்றத்தைவிடக் குறைத்து மதிப்பிட முடியாது. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதனூடாக தாம் பாராளுமன்றத்திலிருந்தும் செயற்றிறனற்றவர்கள் என்பதை மக்களுக்கு காட்டிக் கொடுத்து விடுமென்பதனாலேயே அவர்கள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது எனக்கூக்குரலிடுகின்றார்கள்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதனூடாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகுமெனக் கூறுபவர்களே குண்டு வைக்கும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் என அவர்களே அவர்களின் கருத்துக்களினூடாக  வௌிக்காட்டி நிற்கின்றனர்.

முட்டாள்தனமான கேலிக்கருத்துக்களை கூறுபவர்களை கருத்திலெடுக்காமல் அரசாங்கம் மாகாணங்களு்ககான அதிகாரங்களை வழங்கும் பொறிமுறையைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here