ஹரீஸ் அரசியல்வாதியல்ல: ஒரு சமூகவாதி-ஹரீஸின் ஊர்ப்பற்றைப் பாராட்டுகிறேன்

0
162

Dy. Hareesதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான மிகப்பெரும் போராட்டம் சென்று கொண்டிருக்கும் நிலையில், நான்கு பிரதேச சபைகளாகவன்றி கல்முனை மாநகர சபையைப் பிரிக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டில் மிகத்திடகாத்திரமாகவுள்ளார். இவரின் இத்திடகாத்திரமான கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறி வருகின்றமையே இங்கு கவனிக்கத்தக்கது.

அவர் வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் முழுமையான எதிர்ப்பைச் சம்பாதிப்பார். இது அவருக்கும் தெரியும். இருந்தாலும், அதனை அவர் சிறிதேனும் கவனத்திற்கொள்ளவில்லை. அவர் எடுத்திருக்கும் முடிவு சரியா? பிழையா? என்பதற்கப்பால் தனது கொள்கையை மிக வெளிப்படையாக முன்னெடுத்து வருகிறார். இதனை அவர் வெளிப்படையாக முன்னெடுக்காது வாக்குகளைக் கருத்திற்கொண்டு ஒரு அரசியல்வாதியாக மறைந்து செயற்பட்டிருக்கலாம். ஹரீஸ் அரசியல்வாதியல்ல. ஒரு சமூகவாதி.

சாய்ந்தமருது அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளைப் பாருங்கள். ஒருவர் கூட இந்த விடயத்தில் முன்னின்று களத்தில் நின்று போராடுவதாக இல்லை. இதற்கு எதிர்காலத்தில் கல்முனை மக்களின் வாக்குகளைப்பெற முடியாதென்ற ஒரு விடயம் பிரதான காரணம். ஆனால், சாய்ந்தமருது வாக்குகளை தான் இழப்பேன் என அறிந்தும், அதனைக்கருத்திற்கொள்ளாது போராடுகின்றார். அதுவே கொள்கை வீரனுக்குரிய அழகாகும்.

இனி சாய்ந்தமருது ஹரீசுக்கெதிராக மாறும் அதே நேரம், கல்முனை ஹரீசின் கோட்டையாக மாறும். இதன் பின்னும் இவருக்கு கல்முனை பூரணமாக ஆதரவளிக்காது போனால், அவர்கள் துரோகிகள். ஹரீஸ் தூய முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் பாதை எடுத்துக்கொண்டிருக்கின்றார். அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறையிலிருந்து துடைத்து வீசப்படுவதற்கான அனைத்தும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பு: இங்கு நான் ஹரீசின் ஊர்ப்பற்றையும் கொள்கை மீது கொண்ட அவரது போராட்டப் பண்பையும் பாராட்டுகிறேனே தவிர, அவரது கொள்கை சரியானதா? பிழையானதா? எனக்கூறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here