உள்ளூராட்சி சபை விடயத்தில் அரசியல் ஆட்டத்திற்கு இடமில்லை-சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல்

0
207

DSC07050-எம்.வை.அமீர், யூ.கே.கலித்தீன்-
சாய்ந்தமருதில் தற்போதுள்ள நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்தோடு யாராவது தாம் வகிக்கின்ற பதவிகளை இராஜினாமாச்செய்து விட்டு வந்திருக்கின்றோம் என்ற மாயையை  ஏற்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தில் இணையும் எண்ணமிருந்தால் அந்த எண்ணத்தைக் கைவிடுமாறும், அவ்வாறு இராஜினாமாச் செய்தாலும் உங்களது வீடுகளிலேயே இருந்து கொள்ளுங்கள் என்றும், அப்படி தங்களது புனித பயணத்தில் இணைய விரும்பினால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை பிரகடனப்படுத்திய அரச வர்த்தமானியைக் கையோடு கொண்டு வருமாறும், அவ்வாறு வந்தால் மிகப்பிரமாண்டமான மேடையில் வரவேற்கக் காத்திருப்பதாகவும் சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருதில் உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் பிரமாண்டமான ஒன்றுகூடல்கள் இடம்பெற்று வரும் சூழலில், இன்று 2017-10-30 ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைக்கோரிக்கை சம்பந்தமாக பல இடங்களில் அலைந்து நிறைய அரசியல்வாதிகளைச் சந்தித்தும் ஏமாற்றங்கள், கழுத்தறுப்புக்கள் மற்றும் சதிகளை சந்தித்ததாகவும் ஏமாற்றப்பட்டுள்ள நிலையிலேயே போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுவதாகவும், போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும் இதனைச் சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினரும் பொது அமைப்புக்களும் கொண்டு செல்வதாகவும் நம்பியிருந்த அரசியல்வாதிகள் கோரிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளதால், இவர்கள் மீது நம்பிக்கையிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, வழமையான ஆட்டம் ஆடவந்தால் அது தங்களது உணர்வுபூர்வமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது போலாகி விடும். இந்த முடிவை உங்களது கடந்த கால வரலாற்றுச்செயற்பாடுகள் தான் தங்களை இவ்வாறு கூற வைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையை பள்ளிவாசலின் செயலாளரும் இளைஞர் முகம்மட் அஸீமும் வெள்ளமென கூடியிருந்த மக்கள் மத்தியில் வாசித்தனர்.DSC07050 DSC07057 DSC07064

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here