கினியமவில் ஆச்சரியமாய் அமைந்த நண்பர்களின் சந்திப்பு

0
221

a4a9a7b5-05a1-4a65-8822-5a19f7be5347எம்.பி.எம்,அர்ஷாத்

பெருமையின் காரணமாக அல்ல. பெறாமையின் காரணமாக ஏற்பட்ட பொறாமையினால் என்னுள் ஏற்பட்ட தாக்கமே இப்பதிவு.

பொதுவாக பள்ளிப்பருவ நட்பென்பது பாடசாலை வாழ்க்கை முடியும் வரை அல்லது திருமணமாகும் வரை தான். ஆண்களாக இருப்பின், எப்போதாவது சந்தித்துக்கொள்ள முடியுமென்று கூறலாம். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்குப்பின் தனது நண்பர்களைச் சந்திப்பதென்பது வெறும் பகல் கனவாகவே இருக்கும்.

அந்த பல நாள் பகல் கனவு ஒரு நாள் நிறைவேறினால்…ஆம் கடந்த 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநாகல் மாவட்டத்தில் வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய கினியம என்னும் அழகிய கிராமத்தில் பல நண்பர்களின் இந்த பகல் கனவு நிறைவேறியது.

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியின் 1993ம் ஆண்டு உயர் தரம் எழுதிய மாணவர்களாகிய அன்பாஸ், அனீஸ், பசீர், பல்கீஸ், பிரிட்ஜெட், பாவ்சத், பாலீல், பாரிஸ் (நீதவான்), பாஹீம், பார்வீன், பார்ஷனா, புவனேஸ்வரன் (பிரதி அதிபர்), இர்பான் (அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்), இம்தியாஸ், ஜவ்பர், ஜசீர், ஜவாத், மும்தாஸ், முஜீப், மஞ்சுளா, நசீர், நசார், நாசிம், நபீஸா, நஸீமா, நஸ்ரியா, நஷ்லின், நுஸ்ரத், பொற்றாமரை (அரச உத்தியோகத்தர்), ரனீஸ், ரொஷானா (ஆசிரியயை), ரிஸ்வான், ரியாஸ், ரியால், ரினோசா, சப்ரி (பிரதி அதிபர்), சப்வான், சதாத், சலாஹுதீன், சுபைர் (மரண பரிசோதனையாளர்), சர்மினா (கணக்காளர்), ஷிபானி, சிவகுமார், சாஹிரா (ஆசிரியை), சரூனா (மன்னிக்கவும் ஏனையவர்களது தொழில் விபரம் தெரியாததால் பதிவு செய்யப்படவில்லை) ஆகியவர்களே தனது பள்ளிப்பருவ நண்பர்களை 24 வருடங்களின் பின் மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வுவின் போது, சந்தித்துக்கொண்ட நண்பர்களின் முகங்களில் காணப்பட்ட சந்தோசத்தை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஊர் மக்கள் மத்தியில் இந்நிகழ்வு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரதும் பழைய பாடசாலை வாழ்க்கை நினைவுகளையும் ஒரு கணம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

நட்புக்கு இன, மொழி, நிறம், குணம், ஜாதி, மதமில்லை என்று மட்டுமல்லமால் நட்புக்கு வயதுமில்லை என்று இவர்கள் நிரூபித்தனர். இச்சந்திப்பில் முழு ஊரும் ஜோதி மயமானது.

நண்பர்கள் என்றால் இவர்களைப்போல் தான் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு நண்பர்களும் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உன்னதமான நட்பு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துவதோடு, நாமனைவருக்கும் எமது பாடசாலை வாழ்கையை நினைவுபடுத்திய இவர்களது  நட்பு பல்லாண்டு காலம் நிலைக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.4fe7222d-ae1b-4374-a55f-fdc854e15969 5bd137af-3256-4a38-92c8-2faf790b3346 57a58003-264e-4d6d-91f5-5472892e2a89 189b6417-d887-4ce6-b5e5-0afc32b8b875 837cabaf-5472-4232-8f5f-539c16638e67 f1df0e3e-5a96-4f62-b259-9f98f5d70b39 d0bdda9b-1062-4bbc-b11a-7a3bdc2cf2d0 c2bac216-c003-43f8-b710-1f26b2686187 a10c9c4f-d483-4211-822c-7da0d2018b08 a4a9a7b5-05a1-4a65-8822-5a19f7be5347

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here