ராஜபக்‌ஷ குடும்பத்தை சிறையிலடைத்து புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சி-நாமல் ராஜபக்ஸ

0
222

image_123986672ராஜபக்ஸ குடும்பத்தை சிறையிலடைத்தாவது, இலங்கை அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து இலங்கை நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிப்பாதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கலாசாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்குப் பின்னாலுள்ள சிலரே புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து நாட்டை அழிவுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன நல்லுறவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். கைது செய்யப்பட்ட 12000 விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வளித்தார். இந்த எண்ணிக்கை சாதாரணமான எண்ணிக்கையல்ல. இதிலேயே அவர் இன நல்லுறவை மேம்படுத்த எந்தளவு அக்கறையுடன் செயற்பட்டுள்ளார் என்பதை இன்று இன நல்லுறவைப் பற்றிப்பேசுபவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த அரசாங்கமானது இலங்கை அரசியலமைப்பை இன நல்லுறவை மேம்படுத்தப்போகிறோம் எனக்கூறிக்கொண்டு இலங்கை நாட்டை அணுவணுவாகச் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இன நல்லுறவைக் கட்டியெழுப்ப எத்தனையோ விடயங்கள் உள்ள போது, எடுத்த எடுப்பில் அரசியலமைப்பிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமா?

இன நல்லுறவை மேம்படுத்த இவ்வரசு வேறென்ன செய்துள்ளது. இவர்களுக்கு தாய் நாட்டின் மீது சிறிதளவும் அக்கறையில்லை. இல்லாவிட்டால், இலங்கை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பார்களா?

இலங்கை நாட்டின் அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கை நாட்டின் கலாசாரத்தையோ அல்லது இங்குள்ள மதங்களையோ பின்பற்றுபவர்களல்ல. இவர்களுக்கு இலங்கை நாட்டின் மீது பற்றிருக்காது. இவர்களின் சில்லறை விளையாட்டை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். மிகக்கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம். இது அவர்களுக்கும் தெரியும்.

இவ்வரசு முழு ராஜபக்ஸ குடும்பத்தினரை சிறையிலடைத்தாவது, தங்களது விடயங்களைச் சாதிக்கும் நிலையிலுள்ளது. எங்களைக் கைது செய்தாலும், எங்களது உறவுகளான இலங்கை மக்கள் இவ்வரசுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here