சம்மாந்துறை பிரதேச சபை தரமுயர்த்தல் அறிவித்தலுக்கும் மன்சூருக்கும் என்ன சம்பந்தம்?

0
281

mpதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.
அண்மையில் சம்மாந்துறைப் பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்துதல் தொடர்பான மக்கள் கருத்துக்களை அறியும் பத்திரிகை அறிவித்தலொன்று தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இது வெளியாவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு சம்மாந்துறையை நகர சபையாகத் தரமுயர்த்துதல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தலைமையில் நடைபெற்றிருந்ததால், அதன் விளைவாகவே இது நடந்தேறியதென்ற செய்தியை  கொண்டு செல்லவும் மக்கள் அதில் சற்று நம்பிக்கை கொள்ளவும் ஏதுவாக அமைந்திருந்தது. அவரின் முயற்சியினாலேயே இது நடந்தேறி இருந்ததாக அவரது முகநூல் பக்கத்திலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் உள்ளூராட்சி அமைச்சராக கருஜயசூரிய இருந்த காலத்திலிருந்தே சம்மாந்துறையை இரு சபைகளாகப் பிரித்து தரமுயர்த்தும் கோரிக்கையை முன் வைத்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியாகிய பத்திரிகை அறிக்கையில் சம்மாந்துறையை இரு சபைகளாகப் பிரிப்பது சம்பந்தமான எந்தக்கருத்துக்களும் கோரப்பட்டிருக்கவில்லை. அங்கு கோரப்பட்டிருந்தது சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதலே.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் கோரிக்கை எடுபட்டிருந்தால், சம்மாந்துறையை இரு சபைகளாகப் பிரித்து தரமுயர்த்தல் தொடர்பான மக்கள் கருத்தே குறித்த பத்திரிகை அறிவித்தலில் கோரப்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து இங்கு கோரப்பட்ட பத்திரிகை அறிவித்தலுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். சம்மாந்துறை இரண்டாகப் பிரிக்கப்படாமல் தனி நகர சபையாக மாற்றப்பட்டால், அதற்கு அவர் உரிமை கோரவும் முடியாது.
இப்பத்திரிகை அறிவித்தல் வெளிவந்ததும் தனது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கொதித்தெழுந்திருக்க வேண்டும். மாறாக, குறித்த பத்திரிகை அறிவித்தல் தனது முயற்சியினாலேயே வந்ததெனக்கூறுவது ஊரா பிள்ளைக்கு தனது பெயரை வைக்க முயல்வது மாத்திரமன்றி, வெட்கப்பட வேண்டியதும் தனது கோரிக்கை என்ன? பத்திரிகையில் வெளிவந்துள்ள விடயம் என்னவென தெரியாத நிலையில் அவர் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here