முன்னாள் முதலமைச்சரின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" உன்னதத்திட்டம் ஏறாவூரில் அங்குரார்ப்பணம்

0
234

Captureகல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில்  ஆரம்பப்பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் உன்னதத்திட்டத்தின முதற்கட்டம் இன்று (31.10.2017) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

இத்திட்டம்  அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தத்திட்டத்தின் முதற்கட்டம் இன்று 31.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில்  இடம் பெறவுள்ளது.

இதன் போது, அல் முனீரா மகா வித்தியாலயத்தின் தரம் 01 முதல் 05 வரையான  வகுப்புக்களில் கல்வி பயிலும் 260க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு முன்னாள் கிழக்கு முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் கற்றல்  உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தொடர்ச்சியாக அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பைகள் வழங்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here