இறக்காமத்தில் மக்கள் காங்கிரஸின் முயற்சியினால் மூன்று வீதிகள் பூர்த்தி

0
254

indexஇறக்காமத்தில் அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கமைவாக உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இறக்காமம் எட்டாம் பிரிவில் அமைந்துள்ள மையவாடி வீதி, இறக்காமல் ஏழாம் பிரிவில் அமைந்துள்ள நல்லதண்ணி மலை பிரதான வீதி. இறக்காமம் இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள வாங்காமம் வீதி ஆகிய மூன்று வீதிகள் நிறைவுறும் நிலையிலுள்ளன.

இவற்றில் இறக்காமம் இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள வாங்காமம் வீதிக்கான வேலைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, ஏனைய இரு வீதிகளின் வேலைகளும் நிறைவு பெற்றுள்ளன. இவ்வீதிகள் ஒவ்வொன்றுக்கும் தலா இருபது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைச்செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் என்ற ரீதியிலும் இறக்காமத்தைச்சேர்ந்தவர் என்ற ரீதியிலும் நன்றி செலுத்தப் கடமைப்பட்டுள்ளேன். எதிர்காலத்தில் அமைச்சர் றிஷாதினூடாக பலவாறான சேவைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இறக்காமம் கந்தூரி வைப்பவத்தில் உணவு நஞ்சாகிய விவகாரத்தில் மரணமடைந்த மூவருக்கும் தலா எட்டு இலட்சம் பெறுமதியான வீடுகளுக்கான உதவிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நௌபர் மௌலவி
தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு
இறக்காமம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here