பசியினால் வாந்தியெடுத்த மாணவியை கர்ப்பிணி என அபாண்டம் சுமத்திய அதிபர் கடமையிலிருந்து இடை நிறுத்தம்.

0
354

(அஸீம் கிலாப்தீன்)

downloadபாட­சாலை கல்வி நட­வ­டிக்­கையின் போது வாந்தி எடுத்த 10 ஆம் ஆண்டு மாணவி ஒரு­வரை கர்ப்­பிணி என கூறி பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கிய சம்­ப­வத்­தை­ய­டுத்து பாட­சாலை பெண் அதிபர் கட­மை­யி­லி­ருந்து இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.

கெக்­கி­ராவ கல்வி வல­யத்தைச் சேர்ந்த மடாட்­டுக ரேவத்த மகா­வித்­தி­யா­லயத்­தி­லேயே மேற்­படி சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றி­ருந்­தது.

10 ஆம் ஆண்டு வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் பாட­சாலை கல்வி வேளையில் திடீ­ரென வாந்தி எடுத்து உபா­தைக்­குள்­ளானார்.

இத­னை­ய­டுத்து பாட­சாலை அதிபர் இம்­மா­ணவி கர்ப்­பி­ணி­யா­கி­யுள்ளார் என தெரி­வித்து மாண­வியை பாட­சா­லையை விட்டு நீக்­கினார்.

இந்த சம்­ப­வத்தை கண்­டித்து பெற்றோர் கல்வி அமைச்சர் உட்­பட பல உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பாடு செய்­த­துடன் மாண­வியை வைத்­தி­ய­சாலையில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தினர். வைத்­தி­ய­சாலை பரி­சோ­தனை அறிக்­கையில் மாணவி கர்ப்­பி­ணி­யல்ல என்றும் பசியின் கார­ண­மா­கவே வாந்தி எடுத்­தி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்த பாட­சாலை பெண் அதி­ப­ருக்கு எதி­ராக பல்­வேறு தரப்­பு­க­ளி­லி­ருந்து எதிர்ப்­புகள் எழுந்­துள்ள நிலையில், மேற்­படி அதிபர் கட­மை­யி­லி­ருந்து இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது நட­வ­டிக்­கைகள் குறித்து உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு கல்வி அமைச்சர் மாகாண கல்வி அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை வழங்­கி­யுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here