அவதுாறு வழக்கில் மன்சூர் எம்பிக்கு ஒரு கோடி நஷ்டயீடு

0
349

Mansoor MP Sammanthuraiசம்மாந்துறை அன்சார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் 2013ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் சுடர் ஒளி பத்திரிகை நிறுவனத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்டயீட்டு வழக்கு இணக்கப்பாட்டிற்கு வந்ததன் காரணமாக, குறித்த நிறுவனத்தினரிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு 1 கோடியே 3 இலட்சம் ரூபாய் நஷ்டயீட்டுத் தொகையினைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 15 ஆம் (2013.05.15) திகதி சுடர் ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிட்ட ‘முஸ்லிம் முரசு’ வாராந்தப் பத்திகைரியின் முதலாவது இதழில் அப்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த மன்சூருக்கெதிராக பொய்யான தகவல்களை வெளியீட்டருந்தது.

இச்செய்தியானது, தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து அப்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராவிருந்த எம்.ஐ.எம்.மன்சூரினால் குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கெதிராக 500 மில்லியன் ரூபாவை தனக்கு நஸ்டயீடாகத் தரக்கோரி தனது சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மூலம் வழக்கொன்றைத் தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கினால் குறித்த நிறுவனம் இது தொடர்பாக வெளியீட்டிருந்த செய்தி சம்பந்தமாக நீதிமன்றத்தில் எந்தவித ஆதாரத்தினையும் முன்வைக்காமையினால், சுடர் ஒளி நிறுவனம் பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வந்திருந்தது.

இந்நிறுவனத்தின் முகாமையாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் மன்சூர் எம்.பி அடிக்கடி சந்தித்து இது தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தனக்கு கொஞ்சமாவது நஷ்டயீடு தர வேண்டுமென்பதோடு, தாம் வெளியிட்ட செய்தி எந்தவித உண்மைத்தன்மையற்றது என தங்களது பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் இருதரப்பின் இணக்கப்பாட்டிற்கு வந்ததன் காரணமாக வழக்கு முடிவுக்கு வந்தது.

அன்று மாகாண அமைச்சராகவிருந்த மன்சூர் அவர்களின் அரசியல் வளர்ச்சியினைப் பொறுக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்சி கொண்டவர்களினால் பரப்பட்ட பொய்யான செய்தி சம்பந்தமான தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்ததனையடுத்து, மன்சூர் எம்.பிக்கு ஒரு கோடியே மூன்று இலட்சம் ரூபாய் நஷ்டயீட்டுத் தொகை கிடைத்துள்ளது.

இது சம்பந்தமான மறுப்புச்செய்தி சுடர் ஒளி பத்திரிகையில் பிரசுரமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.22815165_1381807471917396_4375821422790197916_n 22851758_1381807541917389_7185950322262553179_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here