செம்மண்ணோடை வாசிகசாலையை நூலகமாகத்தரமுயர்த்தும் நிகழ்வு

0
287

_DSC0618(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் செம்மண்ணோடை RDS வீதியில் இயங்கி வரும் சனசமூக நிலைய வாசிகசாலையை நூலகமாகத் தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று 31ம் திகதி செவ்வாய்க்கிழமை சனசமூக நிலையத்தலைவர் ஏ.எல்.ஏ.கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கத்தை அதிகரிக்கச்செய்யவும், பொது அறிவு விடயங்களைத் தெரிந்து கொள்வதற்குமான ஏற்பாட்டில் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக இப்பிரதேச பொது மக்களும் மாணவர்களும் பயனடைவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச செயலாளார் எஸ்.எம். ஷிஹாப்தீன், சனசமூக நிலைய உத்தியோகத்தர் எஸ்.குகநாதன், எழுத்தாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் சஹ்வி, கிராம சேவகர் எம்.எம்.அன்வர் சாதாத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.முசம்மில், சாட்டோ வை.எல்.மன்சூர் ஆகியோர்களோடு ஆசிரியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.    _DSC0592 _DSC0595 _DSC0597 _DSC0610 _DSC0615 _DSC0618 _DSC0620 _DSC0624 _DSC0630 _DSC0632 _DSC0634 _DSC0646

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here