பறிபோயுள்ள காணிகளை மீட்டெடுக்க ஓட்டமாவடி பள்ளிவாயலின் புதிய தலைமை அமீர் அலியுடன் கைகோர்க்க வேண்டும்-சாட்டோ மன்சூர் (வீடியோ)

0
282

kavar photoஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்  
ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு புதிய தலைமைத்துவத்தினை வழங்கவிருக்கின்ற முன்னாள் அதிபரும் கோட்டக்கல்வி அதிகாரியுமான ஜுனைட் ஆசிரியரிடம் உரிமையுடன் வேண்டிக்கொள்வதாவது, நீங்கள் வெறுமனே ஓட்டமாவடி நம்பிக்கையாளர் சபையின் தலைவராக மட்டும் இருந்து விடக்கூடாது. மாறாக, எங்களிடமிருந்து பறிபோயுள்ள 160 சதுர கிலோ மீற்றர் நிலபுலங்களை எங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினரும், தலை முறையினரும் மீட்டெடுப்பதற்காக பள்ளிவாயல் தலைமையாகச் செயற்படுமாறு பகிரங்கமாக வேண்டிக்கொள்கின்றேன்.

அத்தோடு, குறித்த எமது நிலபுலங்களை மீட்டுகொள்வதற்காக புதிய ஓட்டமாவடி பள்ளிவாயலின் தலைமை பிரதியமைச்சர் அமீர் அலியுடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டுமென இந்த சமூகத்தின் ஓர் அங்கத்தவன் என்ற வகையிலும், குடும்ப உறுப்பினர் என்ற வகையிலும் புதிய தலைவர் ஜுனைட் அவர்களிடம் வேண்டிக்கொள்வதாக சாட்டோ மன்சூர் குறிப்பிட்டார்.

மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 29.10.2017ம் திகதி மாலை மீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அதிபர்களுக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், கல்வி நிருவாக சேவைக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சையில் சிந்தியடைந்தவர்கள், அதற்காக உழைத்த ஆசிரியர்கள் எனப்பலதரப்பட்டவர்களைக் கெளரவிக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சமூக ஆர்வலரும் பிரதியமைச்சர் அமீர் அலியின் தற்போதைய தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவித்தார்.

பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்ட குறித்த கெளரவிப்பு விழாவில் இடம்பெற்ற சாட்டோ மன்சூரின் உரையோடு, நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ – புதிய நிருவாகத்திடம் மன்சூரின் வேண்டுகோள் :-
www.youtube.com/watch?v=8FmS6KOYNX0&feature=youtu.be
kavar photo 20171029_181059 20171029_161232

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here