தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு காலத்தின் தேவை-கத்தார் ஏறாவூர் அசோசியேசன்

0
346

முஹம்மது முனாபர்

மட்டு நகரில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தமிழ் முஸ்லிம்களின் உறவில் எதுவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பிரச்சினைகளை சுமூகமாகப் பேசித்தீர்க்க சகல தரப்பினரும் முன் வர வேண்டுமென கத்தார் ஏறாவூர் அசோசியேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலை காரணமாக அன்றாடம் தங்களது ஜீவனோபாயத்தைத் தேடிவரும் தமிழ், முஸ்லிம்களுக்கும் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது, தங்களது வியாபார நடவடிக்கைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

அத்தோடு, இனங்களுக்கிடையில் முறுகலை உண்டு பண்ணி அதில் அரசியல் இலாபம் தேட முயலும் சக்திகளை மக்கள் இனம் காண வேண்டுமென்பதுடன், அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போது, எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவு பலப்படுத்தப்பட வாய்ப்பாக அமையுமென கத்தார் ஏறாவூர் அசோசியேசன் கேட்டுக்கொள்கின்றது.
செயலாளர்
Eravur Associantion of Qatar.WhatsApp Image 2017-11-01 at 11.15.15 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here