சம்மாந்துறை மக்களால் நிராகரிக்கப்பட்ட மன்சூர் எம்.பியின் பிரிப்புக்கோரிக்கை

0
311

Mansoor MP Sammanthurai(ஹபீல் எம்.சுஹைர்)
பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கோமாவிலிருந்து திடீரென விழித்தவர் போல சம்மாந்துறைப் பிரதேச சபையை இரு சபைகளாகப் பிரிக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இக்கோரிக்கையானது ஏற்கனவே அமைச்சர் அதாவுல்லாஹ்வின் காலத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்ற காரணத்தால் அனைவராலும் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த வரலாறு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் தற்போது அது பற்றிய கதையாடலுக்கு வந்திருக்கமாட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறை தொடர்பில் சிந்தித்த பல விடயங்களை சம்மாந்துறை மக்களே முன்னின்று தடுத்து வருகின்றனர். அண்மையில் தாருஸ்ஸலாம் பாடசாலைக்கட்டடம், பிரதான வீதிகளை அகலமாக்குதல் போன்ற விடயங்கள் சர்ச்சையாக்கப்பட்டிருன்தது. அது போன்று, இவரது பிரிப்புக்கோரிக்கையும் சம்மாந்துறை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

இந்தளவு சம்மாந்துறை மக்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தற்போது அவரே தனது கருத்தை மாற்றி பேசி வருகிறார். இதன் மூலம் அவரே தான் சம்மாந்துறை மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளாமல் இருந்ததை ஒப்புக்கொள்கிறார். சம்மாந்துறை மக்களால் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை பழஞ்சீலை போன்று அவரது முகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here