கோத்தபாய ராஜபக்ஷவின் எலிய (வெளிச்சம்) அமைப்பின் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் உவைஸ்

0
121

22886325_1529127297153444_4954500620177167086_nஊடகப்பிரிவு

எலிய (வெளிச்சம்) அமைப்பின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.10.2017) கண்டி ஒக்ரே ஹோட்டலில் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புகெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் உவைஸ், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் சத்தார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும், மத குருமார்களும், புத்திஜீவிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து  கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் சார்பான  பிரதிநிதியாக அல் ஹாஜ் உவைஸ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றுகையில்,

புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத்தெரிவிப்பதற்காகவே எலிய அமைப்பினை உருவாக்கினோம். இந்த அமைப்பு இனவாத அமைப்பல்ல. அரசியலமைப்பு தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதே எமது பிரதான காரியமாகும்.

இந்த அமைப்பில் இனவாதிகளில்லை. பயங்கரவாதம் இருக்கும் போது, யுத்தத்தினால் புலிகளை அழிக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்று கூறி செயற்பட்ட அதே தரப்பினர் தான் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னிலை வகித்துச் செயற்படுகின்றனர்.

புலிகளுக்காக சர்வதேச நாடுகளுக்கு பல்வேறு தகவல்களை வழங்கிய புலம்பெயர் அமைப்பினர் தானே அரசியலமைப்பினைத் தயாரிக்க வேண்டுமென்பதில் முன்னிலையிலுள்ளனர். இவர்களின் நோக்கம் என்ன? நாட்டை பிளவுபடுத்துவதாகும்.

இதன் காரணமாகவே, இதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துவதற்காக எலிய அமைப்பினைத் தோற்றுவித்தேன். இந்நாட்டில் வாழும் மூவின மக்களுக்கு இந்நாட்டில் கெளரவமான பிரஜையாக வாழும் உரிமையுள்ளது. அதற்கு சிங்கள மக்கள் ஒரு போதும் தடையாக இருக்கமாட்டார்கள். எதிர்க்கவும் மாட்டார்கள்.

அவ்வாறு எதிர்த்தது,மில்லை. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கிற்கப்பால் பெரும்பான்மையினர் தெற்கில் தான் வாழ்கின்றனர். எனினும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.

1983 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதன் போது ஏற்பட்ட அவலங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்தக்கலவரத்திற்கு 13 இராணுவ வீரர்களின் கொலை காரணமானது. எனினும், அப்போது முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கில் இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்ட போது, எமது மக்கள் அவ்வாறு செயற்படவில்லை.

அத்துடன், இந்தப்பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் எந்தப்பிரச்சினையுமில்லாமல் கல்வி பயில்வதற்கும் பல்கலைக்கழகம் சென்று மருத்துவர், சட்டத்தரணியாகச் செயற்படுவதற்கும் சிங்கள மக்களினால் இடையூறுள்ளதா?

நான் எட்டு வருடங்கள் பாதுகாப்புச்செயலாளராக இருந்தேன். எனக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கொன்றின் போது, எனது எதிர்த்தரப்புச் சட்டத்தரணியாக தமிழ் தேசியக்கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வாதமிட்டார்.

எனவே, இவ்வாறான தொழிலைச் செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளது. அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம். அத்துடன், 30 வருட கால யுத்தத்தினால் வடக்கிலிருந்து வந்த பலர் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் குடியேறினர். இதன் போது, சிங்கள மக்கள் எதிர்த்தனரா? எனவே, நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும்.

நான் கூறியவை அதற்குச்சிறந்த எடுத்துக்காட்டாகும். அத்துடன், தற்போது விடுதலைப்புலிகளுமில்லை. ஆகவே, நல்லிணக்கத்தைச் சிறப்பான முறையில் ஏற்படுத்த முடியும்.

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் இருக்கும் போது, ஏன் புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வரத் துடிக்கின்றீர்கள்? எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு பிரச்சினையுள்ளது என்பதனை நான் ஒப்புக்கொள்கின்றேன்.

அந்த பிரச்சினை வேறு. அங்குள்ள மக்கள் யுத்தத்தினால் மிகவும் துயரம் கொண்டனர். யுத்தம் கார ணமாக அபிவிருத்தி ஏற்பட முடியாமல் போனது. எனினும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாம் வடக்கு பகுதிக்கு அதிக நிதியொதுக்கீடுகள் செய்து அபிவிருத்தியைத் துரிதப்படுத்தினோம். மின் வசதி, வீதி நிர்மாணம்இ, ரயில் போக்குவரத்து வசதிகளை வழங்கினோம்.

அதனையும் விட ஜனநாயகத்தை வழங்கினோம். எனினும், இனவாதத்தைக் கக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இதனைப் பற்றிப்பேசுவது கிடையாது. யுத்தத்தின் பின்னர் வடக்கு பகுதியில் ஆயுதப்புழக்கம் இருப்பதனைத் தெரிந்திருந்தும் அப்பகுதியிலுள்ளவர்களிடமிருந்து ஆயுதங்களை மீளப்பெற்று வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்தினோம்.

இந்தத்தேர்தலை நடத்த வேண்டாமென பல தரப்பினர் கோரிய போதும் நாம் தேர்தலை நடத்தினோம். அத்துடன், யுத்தத்தின் போது சுவீகரித்த காணிகள் அனைத்தையும் நாம் மக்களுக்கு வழங்கினோம். அதுமாத்திரமின்றி, அந்த பகுதியின் அபிவிருத்திக்காக தனியார் நிறுவனங்களிடம் தொழிற்சாலைகளை ஆரம்பிக்குமாறு கோரினோம். எனினும் எவரும் முன்வரவில்லை.

என்றாலும், ஓரிரு நிறுவனங்களை எம்மால் ஆரம்பிக்க முடிந்தது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத்தெரிவித்துள்ளார். இதன்படி தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை ஒற்றையாட்சி நாடு கிடையாது. இது பல்லினத்தவர்களின் நாடாகும் எனக்கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில். புதிய அரசியலமைப்பினூடாக ஒற்றையாட்சியை நீக்கமாட்டோம் எனக்கூறுகின்றனர். அப்படியாயின், ஒற்றையாட்சிக்குரிய பிரதான அம்சங்களை நீக்கக்கூடாது. அதாவது ஆளுநரின் அதிகாரம் தொடர்ந்து ஆளுநரின் வசமே இருக்க வேண்டும்.

மேலும், பாராளுமன்றத்திற்கே சட்டவாக்க அதிகாரம் இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அது சென்றால், அது நாடு பிளவுபடுவதற்கு காரணமாகி விடும். மேலும் காணி உரிமை தொடர்ந்து மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இந்த காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கினால் அதனை ஒற்றையாட்சியாக எடுக்கலாம்.

ஒற்றையாட்சிக்குரிய பிரதான அம்சங்களான இந்த மூன்று காரணிகள் நீக்கப்படாதென்பதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்குறித்த பிரதான விடயங்களை மாற்றம் செய்யமாட் டோம் என அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும். ஒற்றையாட்சி வார்த்தையில் மாத்திரமிருந்தால் போதாது. அரசியலமைப்பு உட்கட்டமைப்பில் தெளிவாகக்கூற வேண்டும். நல்லிணக்கத்தின் பெயரினால் புதிய அரசியலமைப்புக்கான காரணங்களை முன்னெடுக்க வேண்டாம்.

நாட்டைப்பிளவுபடுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதற்கு இந்தியா-பாகிஸ்தான் உதாரணமாகும். இந்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதனைத் தடுப்பது எமது நோக்கமில்லை. சிறு தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அது பாரதூரமாக அமையும். மொழி தான் தமிழ் மக்களின் பிரச்சினையென்றால், அதனைத்தீர்க்க முடியும். இதற்கு அரசியலமைப்பு பதில் கிடையாது.

எனவே, புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை உடன்நிறுத்துங்கள். வட க்கு, கிழக்குப் பகுதிகளில் பிரச்சினை இருந்தால் அபிவிருத்தியைத் தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். தனியார் முதலீடுகள் மூலம் பதில் வழங்குங்கள். வடக்கிலுள்ள மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனினும், வடக்கு மாகாண சபை மக்களின் பொதுவான பிரச்சினைகளைப் பற்றி பேசுவது கிடையாது. அரசியலமைப்பின் மூலம் அதிகாரத்தைப் பெறுவது பற்றி தான் இவர்கள் பேசுகின்றனர். சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. தமிழ் தலைவர்களின் தமது இயலாமையை எடுத்துக்காட்டுகின்றனர்.

நாம் பாரிய அபிவிருத்தியைச்செய்தோம். எனவே, இந்த அரசாங்கமும் வடக்கிற்கான அபிவிருத்திகளைத் தொடர வேண்டு,மென்றார். இன்னும் பல விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாக அல் ஹாஜ் உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார்.22886325_1529127297153444_4954500620177167086_n 23031279_1529127850486722_3909799350397509766_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here