சாய்ந்தமருதுக்கான தனியான சபை தற்போதைக்கில்லை-அமைச்சா் பைசா் முஸ்தாபா

0
264

yyy(அஷ்ரப் ஏ சமத்)
கல்முனை, சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கேட்டு  கடந்த பல ஆண்டுகளாக  அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அத்துடன், அங்கு கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்னாவிரதங்கள், ஹர்த்தால் காரணமாக நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இது கடந்த மூன்று நாற்களாக நடைபெற்று வருகின்றன.

இது பற்றி அமைச்சா்  பைசா்  அவா்களே  விளக்கமளிப்பீா்களாக என அவரது ஊடக மாநாட்டில் கேள்வியெழுப்பினேன்.

அமைச்சா் பைசா் தெரிவித்தாவது –

சாய்ந்தமருதுக்கு தனியான தொரு பிரதேச சபை கோரிக்கை இருந்து வருகின்றது. அது பற்றி நான் நன்கறிவேன்.  அதனை அங்கு தோ்தல் காலத்தில் பிரதமரும் தருவதாகச் சொல்லியிருந்தாா். அதனை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  சாய்ந்தமருது சபைக்கான சபையை அனுமதிப்பதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனால், அங்கு  கல்முனையை மாநகர சபையை 4 சபைகளாகப் பிரிக்கக்கோரி இன்னொரு பிரிவினா் அரசியல் அழுத்தங்களைக் கொடுத்தாா்கள். ஆகவே, தற்பொழுது இதனை என்னால் செய்ய முடியாது.

ஏற்கனவே நுவரேலியாவுக்கு 4 சபைகளும், பொலன்னறுவையை மாநகர சபையாகவும் தரமுயா்த்தி, ஏனைய சபைகளுக்கும் இம்முறை தோ்தல் நடைபெறும். கல்முனை மாநகர சபையாகவே இம்முறை தோ்தல் நடைபெறும்.

கல்முனை மாநகர சபை  அல்லது நான்கு சபையாகவா இரண்டாகவா பிரிப்பது பற்றி அங்குள்ள அரசியல் கட்சிகள், தமிழ் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்தால், அடுத்த 4 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெறும் தோ்தலிலேயே அதனைப் பிரிக்க முடியும்.  தற்பொழுது  சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்க அங்குள்ள அரசியல்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வரல் வேண்டும் என அமைச்சர் பைசா் முஸ்தபா பதில்ளித்தாா்.

நுவரேலியாவுக்கான சபைகள் பற்றி அமைச்சரவைப்பத்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. அது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு  கபினட் அனுமதி தேவையில்லை.  என்னால் அனுமதிக்க முடியும். இருந்தும், அனுமதி பெறப்பட்டுள்ளது எனத்தெரிவித்தாா்.

உள்ளூராட்சித்தோ்தல்களை நடத்துவதற்காக தோ்தல் ஆணையாளருக்கான வா்த்தமானி அறிவித்தலை அமைச்சா் பைசா் முஸ்தபா நேற்று (1) தனது அமைச்சில் வைத்து கைச்சாத்திட்டாா். அதன் பின்னா்  தேர்தல் ஆணையாளா் தோ்தல் நடாத்துவதற்கான  நடவடிக்கைகளை அறிவிப்பாா் எனத்தெரிவித்தாா்.999 8888 uuu yyy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here