நீதித்துறையை நோக்கி நகர்வதே முஸ்லிம்களுக்கான தீர்வாகும்-சாட்டோ மன்சூர் (வீடியோ)

0
264

0ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்குட்பட்ட புனானை மேற்கு கிராம சேவகர் பிரிவில், பொத்தானை மீள்குடியேற்ற கிராமத்தில் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பெருந்தடையாக இருந்த வன இலாகா திணைக்கள அதிகாரிகள், மீள்குடியேறிவர்களுக்கெதிராக வாழைச்சேனை மாவட்ட நீதி மன்றத்தில் கடந்த 2016 நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் வழக்குகளைத் தொடுத்திருந்தார்கள்.

அந்த வகையில், பொத்தானை மீள்குடியேற்ற கிராமத்தில் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு தொடர்ந்தேர்சியாக தடைகளை ஏற்படுத்தி வந்த வன இலாகா திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஊடக மயப்படுத்துமுகமாக கடந்த 11.11.2016 அன்று குறித்த மீள் குடியேற்றப் பிரதேசமான பொத்தானை பிரதேசத்திற்கு சாட்டோ மன்சூர் நேரடியாகச்சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஊடக அறிக்கையொன்றினையும் மக்கள் மயப்படுத்தியிருந்தார்.

அதனடிப்படையில், சட்டோ மன்சூரின் அறிவுறுத்தல்களுக்கமைய வன இலாகா அதிகாரிகளினால் மீள்குடியேறியவர்களுக்கெதிராக வாழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. நீதித்துறையானது மிகச்சரியான நீதியினை வழங்கி. அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களை மீண்டும் வாழ்வதற்கு கடந்த 23.10.2017ம் திங்கட்கிழமை தீர்ப்புக்களை வழங்கியுள்ளது.

இச்செய்தியானது வடகிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தங்களது பூர்வீக நிலபுலங்கள் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது நீதித்துறையை நோக்கி நகர்வதே முஸ்லிம்களுக்கான சிறந்த தீர்வாகுமென சமூக ஆர்வலரும் சாட்டோ இணைத்தள செய்தியின் பணிப்பாளருமான வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த பொத்தானை பிரச்சனை சம்பந்தமாகவும், அதற்கான தீர்விற்காக எவ்வாறு நீதி மன்றத்தினை நோக்கி நகர்வது போன்ற விளக்கங்களுடனான சாட்டோ மன்சூரின் சுருக்கமான காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-மன்சூரின் ஊடக அறிக்கை : –
www.youtube.com/watch?v=vrTrpcDHxYc&feature=youtu.be

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here