அல்ககோலைப் பாவிப்பது நஞ்சை உண்மைதற்குச்சமனாகும்-கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்

0
264

20171030_101405_resized_1எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டு. கோறளைப்பற்று வாழைச்சேனையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோறளைப்பற்று இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “நாம் போதையற்ற இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் பாவனையினைக் குறைப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.

கோறளைப்பற்று  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வினை இளைஞர் சேவைகள் அதிகாரி ரி.சபியதாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய இளைஞர் கழக பிரதேச சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கருத்துத்தெரிவிக்கையில்,

“அல்ககோலும் ஒரு வகையான நஞ்சு தான். அதனைப்பாவிப்பதும் நச்சுப்பொருளைப் பாவிப்பதற்குச் சமனாகும். அல்ககோலை அருந்துவதால் முதலில் பாதிக்கப்படுவது குடல் பின்னர் ஈரல் அழிவடையும். இவ்வாறு தொடர்ந்து செல்லும் நிலையில், அது மரணத்தைக் கொண்டு வரும். ஆகவே, ஒவ்வொருவரும் போதைப்பொருள் பாவிப்பதைத் தவிர்த்து சுயநலக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்” எனத்தெரிவித்தார்.

மேலும், விழிப்புணர்வுக் கருத்தரங்கினை பொது சுகாதாரப்பரிசோதகர் ஜெ.ஜசோதரன் நடத்திருந்ததுடன், இக்கருத்தரங்கில் பிரதேச இளைஞர், யுவதிகள் பலர் கலந்து கொண்டு நன்மை பெற்றனர்.

அத்தோடு, குறித்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ புஸ்ப பிரணவ சர்மா குருக்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெஸ்கோ முகாமையாளர் பி கிருபைராசா, கிராம சேவகர் க கிருஷ்ணகாந்த், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மேளனத்தலைவர் ஏ.வினோத் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 20171030_101345_resized_2 20171030_101405_resized_1 20171030_101443_resized 20171030_101453_resized_2 20171030_101503_resized 20171030_101615_resized_1 20171030_101624_resized_1 20171030_103805_resized_1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here