ஒருவர் தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்ல பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்-கோறளைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன்

0
166

23158061_1740658532651316_1657585872_oஎஸ்.எம்.எம்.முர்ஷித்
ஒரு பயனாளி ஒரு தொழிலை மாத்திரம் நம்பி தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்லக்கூடாதென வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மிராவோடை கிராம சேவகர் பிரிவில் சுயதொழிலை  மேற்கொண்டு வரும் பயனாளிகளின் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் சுழற்சி முறையிலான கடன் வழங்கும் நிகழ்வில் நேற்று 03.11.2017ம் திகதி வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழங்கப்பபடும் இக்கடனுதவி மூலம் பிரதேச செயலக ரீதியாக மாத்திரமல்லாமல், மாவட்டத்திலும் சிறந்து விளங்க வேண்டும். பயனாளிகள் தெரிவு சிறப்பாக நடைபெறாத காரணத்தினால் தான் தையல் இயந்திரங்களும், மா, மிளகாய்காய் அரைக்கும் இயந்திரங்களும், பாரிய நிதியில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சிகளும் முடங்கிக் கிடக்கிறது.

ஒரு பயனாளி ஒரு தொழிலை மாத்திரம் நம்பி தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்லக்கூடாது. பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவனின் வழிகாட்டலில் கறுவாக்கேணி சமூகப் பராமரிப்பு நிலையத்தில் நேற்று 03.11.2017ம் திகதி வியாழக்கிழமை சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் லூசியா மற்றும் கள உத்தியோகத்தர், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.23131286_1740658699317966_1957926580_o 23131304_1740658585984644_669122475_o 23131400_1740658672651302_1441105335_o 23134867_1740658592651310_492489395_o 23135049_1740658622651307_906647625_o 23157629_1740658715984631_1911246579_o 23157946_1740658535984649_910438942_o 23158061_1740658532651316_1657585872_o 23158374_1740658579317978_1126143313_o 23158404_1740658745984628_1861117005_o 23192261_1740658575984645_1150898052_o 23192355_1740658555984647_1184763937_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here