கடந்த தேர்தலில் பெறத்தவறிய சிறுபான்மை மக்களின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம்- நாமல் ராஜபக்ஸ

0
292

image_123986672சில இடங்களில் ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து போட்டியிடப்போவதாகக் கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன எந்தக்கட்சியைச் சேர்ந்தவர் எனக்கேள்வி எழுப்பியுள்ளதோடு, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாகத் தேர்தலை நடாத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜித சேனாரத்ன கூறியுள்ள கருத்துத்தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

சில இடங்களில் ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து போட்டியிடப்போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அவர் இக்கருத்தை எக்கட்சி சார்பாகக் கூறுகிறார் என்பதை அறிய விரும்புகிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து போட்டியிட வேண்டுமென ஒரு பக்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

இன்னுமொரு பக்கம் இப்படியான கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள்.எது எப்படியோ சு.கவினால் மாத்திரமல்ல, ஐக்கிய தேசிய கட்சியாலும் தேர்தல்களில் தனித்து வெல்ல முடியாதென்பது தெளிவாகிறது.

அமைச்சர் ராஜிதவின் குறித்த கருத்தினூடாக சில இடங்களில் இரு கட்சிகள் ஒன்றிணைந்து செல்லா விட்டால், வெற்றி பெற முடியாதென்ற விடயம் புலனாகிறது. இதனூடாக பல பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவே அதிகரித்திருப்பதை அறிந்து கொள்ளலாம். இரு கட்சிகளல்ல, ஆயிரம் கட்சிகளைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு எப்படியான வியூகம் அமைத்து வந்தாலும் கூட்டு எதிர்க்கட்சியினரை வெற்றி கொள்ள முடியாது. எங்கள் பின்னால் மக்கள் சக்தியுள்ளது.

இப்படி கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரை கொள்ளச் செய்யாமல் அவசரமாகத் தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவியுங்கள். இன்றைய இந்த ஆட்சியில் எமக்கு பாரிய பங்குள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி பால நடுநிலை வகித்தார்.

நாம்  களத்தில் நின்று போராடி சு.காவுக்கு வாக்குகளை எடுத்துக்கொடுத்தோம். அவ்வாறு பெறப்பட்ட வாக்குகளை ஜனாதிபதி மைத்திரி பால ரணிலின் கால்களில் விழுந்து சு.கவை அடிமைப்படுத்தியுள்ளார். இனியும் இப்படியான செயல்களுக்கு நாம் அனுமதி வழங்கப்போவதில்லை.

எமக்கு பேரின மக்களின் பூரண ஆதரவுள்ளது. நாம் கடந்த தேர்தலில் பெறத்தவறிய சிறுபான்மை மக்களினது ஆதரவையும் தற்போது நாம் பெற்றுள்ளோம். எங்கள் வெற்றியை யார் ஒன்று சேர்ந்தாலும் தடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here