ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்றா, சிறாஜியா அறபுக்கல்லூரிகளுக்கு றோஹினா மஹ்ரூபினால் அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு (வீடியோ)

0
226

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
முன்னாள் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய புள்ளியும், இராஜாங்க அமைச்சருமான அஷ்ஷஹீத் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வியும், தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூஃபின் மூத்த சகோதரியுமான றோஹினா மஹ்ரூஃப் ஓட்டமாவடியிலுள்ள பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபுக்கல்லூரி, சிறாஜியா அறபுக்கல்லூரிக்கும் 450 அல்-குர்ஆன் பிரதிகளை இன்று 03.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

சமூக ஆர்வலரும், சாட்டோ இணைய தளத்தின் பணிப்பாளருமான வை.எல்.மன்சூரின் வேண்டுகோளுக்கமைய குறித்த இரண்டு அறபுக்கல்லூரிகளுக்கும் றோஹினா மஹ்ரூஃப் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபுக்கல்லூரின் நிருவாகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக குறித்த கல்லூரியில் முக்கிய பிரிவாகக் கருதப்படுகின்ற தகவல் தொழில்நுட்ட பிரிவுக்கு மேலதிகமாகத் தேவைப்படுகின்ற ஒரு தொகை கணணிகளை மிக விரைவில் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டது.

சமூக சேவையாளராகவும், பெண் உரிமைகள், விதவைகளுக்கான வாழ்வாதாரங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுத்தல், அவர்களுடைய சுய தொழில்களுக்கான முயற்சிகள் எனப்பலதரப்பட்ட சேவைகளை நாடு தழுவிய ரீதியில் செய்து வரும் றோஹினா மஹ்ரூஃபினுடைய குறித்த ஓட்டமாவடி அறபுக்கல்லூரிகளுக்கான விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ நிகழ்வின் காணொளி : –
www.youtube.com/watch?v=fMtn2a0IukI&feature=youtu.be
01(1) 02 கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here