என்னை விமர்சிக்க அசாத் சாலிக்கு என்ன தகுதியுள்ளது-மிப்லால் மௌலவி கேள்வி

0
244

23201803_893157574185369_1087620250_nயானையின் வாலில் தொங்கும் சாலிக்கு தனிக்கட்சியில் 14379 வாக்கெடுத்த என்னை விமர்சிக்க என்ன தகுதியுள்ளதென ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஜனாதிபதித்தேர்தலில் வாக்கு கேட்டு கொழும்பில் 90 வாக்குகளைப் பெற்றவர் என அஸாத் சாலி ஊடகங்களில் கூறி வருகிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட மிப்லால் மௌலவி 14 379 வாக்குகளைப் பெற்றிருந்தேன் என்பதை நான் அவருக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

பொதுவாக ஜனாதிபதித்தேர்தல் என்றாலே முஸ்லிம்கள் கூட தேசிய கட்சிகளுக்கே வாக்களிப்பர். அனைவரினதும் பார்வைகளும் தேசிய கட்சிகளை நோக்கியதாகவே இருக்கும். இவ்வாறான நிலையில், மிப்லால் மௌலவியினால் 14 379 வாக்குகளைப் பெற முடியுமாக இருந்தால் அது சாதாரண விடயமல்ல.

இந்த வாக்குகள் மனச்சாட்சியை அடகு வைத்து, உண்மைகள் பலவற்றை மறைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏசிப்பெற்றவைகளல்ல. அசாத் சாலி பெற்ற வாக்குகள், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றேன் என்ற பெயரில் இனவாதத்தைத்தூண்டிப் பெறப்பட்டவையாகும். ஞானசார தேரரின் செயற்பாடுகளுக்கு இனவாதப்பேச்சுக்களே வலுச்சேர்த்தன. முடியுமென்றால், அசாத் சாலி தனித்து நின்று ஒரு தேர்தலையாவது எதிர்கொண்டு வெற்றி கொள்ளட்டும்.

தனிக்கட்சியில் புத்தளம் சென்றெல்லாம் படுதோல்வியைத் தழுவிய அசாத் சாலி இனவாதத்தைத் தூண்டியே முஸ்லிம்கள் ஆதரவைப் பெற்றார். முஸ்லிம்களைப் பலி கொடுத்து வாக்குப் பெற்றிருந்தார். முஸ்லிம்களைப் பலி கொடுத்து அரசியல் செய்ய எங்களுக்குத் தெரியாது. இப்போது முஸ்லிம்கள் அவரது உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.image_6483441

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here