மின் துண்டிப்பினால் வரிப்பத்தான்சேனை-வட்டிச்சேனை மக்கள் அவதி

0
288

23313023_730797940461324_2079459714_oவரிப்பத்தான்சேனை அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி)

வரிப்பத்தான்சேனை இரண்டாம் பிரிவில் உள்ளடங்கியிருக்கும் வட்டிச்சேனைப் பகுதியில் சுமாராக 20 குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டிருக்கும் தொடர் மின்சாரத்துண்டிப்பல் அப்பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இது பற்றி அப்பிரதேச மக்கள் கூறுகையில், ” நாங்கள் இப்பிரதேசத்தில் சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் விவசாய உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடைய பகுதியில் காட்டு யானை தொல்லைகளும் அதிகம். இப்படியிருக்கையில் மின் துண்டிப்பால் இரவில் நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது.
அத்துடன், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறு குழந்தைகள் இரவில் தூங்குவதற்கும் பெரும் கஷ்டப்பட்டு நிலை காணப்படுகின்றது.
இது சம்பந்தமாக இலங்கை மின்சார சபை  அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் அவர்கள் எங்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாகத் தெரியவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.  அரசே இது உங்களின் கவனத்திற்கு..23224643_730797923794659_63862991_o 23261792_730797930461325_1397255662_o 23313023_730797940461324_2079459714_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here