வாழைச்சேனை அல் அமீன் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு சங்க ஏற்பாட்டில் மாணவர்களின் கலை நிகழ்வு

0
337
39வாழைச்சேனை அல் அமீன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழி கற்கை மாணவர்களின் கலை நிகழ்வு நேற்று 04.11.2017ம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய பிரதான மண்டபத்தில் அல் அமீன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சங்கத்தின் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் (JP) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வாழைச்சேனை புத்த விகாரையின் பீடாதிபதி கௌரவ தம்பா லங்கார தேரர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் அல் ஹாஜ் M.T.M.பரீட் அவர்களும், செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபர் ஜனாப் M.S.சுபைதீன் அவர்களும், ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சல்மான் வஹாப், அகில இலங்கை YMMA பேரவையின் மாவட்டப்பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான் ஆசிரியர், YMMA பேரவையின் வாழைச்சேனை பிராந்தியக்கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.றிபாய்தீன் (BSE), இலங்கை மனித உரிமைகள் ஆனணக்குழுவின் மாகாணப்பணிப்பாளர் A.M.அப்துல் ஜப்பார் (JP) அவர்களும், H.M.உசனார் ஆசிரியரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில், அல் அமீன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற சிங்கள மொழி கற்கை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், சிங்கள மொழி கற்பிக்கும் ஆசிரியர் A.C.இர்பான் காதர் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கிப் பாராட்டப்பட்டார்கள்.01(1) 02 03 04 06 10 13 14 18 19 20 24 25 26 27 30 31 36 39 40 20171104_173749

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here